தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், சி.எம்.பி வாய்க்கால் சாலையோரத்தில் குவிந்து காணப்படும் கழிவு மணலை ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
டி.என்.டி.ஜே அதிராம்பட்டினம் கிளை-2 சார்பில், அதன் தலைவர் பஜால் முகைதீன் தலைமையில், செயலர் எம்.ஐ அப்துல் ஜப்பார், பொருளாளர் சிராஜூதீன் ஆகியோர் கடந்த செப். 28 ந் தேதி, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷை நேரில் சந்தித்து, சி.எம்.பி வாய்க்கால் சாலையில் காணப்படும் கழிவுகளை அகற்றக்கோரி மனு அளித்தனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் சார்பில், சி.எம்.பி வாய்க்கால் சாலையோரத்தில் குவிந்து காணப்பட்ட கழிவு மணலை, ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு அப்புறப்படுத்தும் பணி இன்று புதன்கிழமை தீவிரமாக நடைபெற்றது. கழிவுகளை பேரூராட்சி மினி டிப்பர் லாரி மூலம் எடுத்துச்சென்று வண்டிப்பேட்டை குப்பைக் கிடங்கின் தாழ்வான பகுதியில் கொட்டப்பட்டது.










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நண்பர்களும் பேருராச்சி பொறுப்பாலர்கலுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஊரின் அக்கரையில் TNTJ
This comment has been removed by the author.
ReplyDeleteIdhodu maelvattil congrete tagadu pottu underlay mud pipe pottu moods call a iraivan taufeeq seivaanaga.
ReplyDeleteAnd concrates for tntj .
ReplyDeleteWell Done TNTJ
ReplyDelete