அதிரை நியூஸ்: அக். 05
அபுதாபியின் புகழ்பெற்ற மக்தா பிரிட்ஜ் (Maqta Bridge) பராமரிப்பு பணிகளுக்காக இன்றிரவு (வியாழன்) இரவு 11 மணிமுதல் சனிக்கிழமை மாலை 5 மணி (அக்டோபர் 7 ஆம் தேதி வரை) பகுதி பகுதியாக மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. முதலில் அபுதாபி மாநகரை நோக்கிச் செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
மக்தா பிரிட்ஜ் எனும் இந்த பாலத்தை பயன்படுத்தி முஸஃபா, அல் அய்ன் மற்றும் முஹமது பின் ஜாயித் சிட்டி (MBZ) செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வேகத்தை குறைத்து வாகனங்களை இயங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஷார்ஜாவின் பரபரப்பு மிகுந்த சம்னான் (Samnan) ஏரியாவிலுள்ள உட்புற சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அந்தப் பகுதியில் உள்நோக்கிச் செல்லும் சாலைகள் அக்டோபர் 10 ஆம் தேதி வரை பகுதி பகுதியாக மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என ஷார்ஜா போக்குவரத்துத் துறை (SRTA) அறிவித்துள்ளது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.