அதிரை நியூஸ்: அக்.18
மஹாராஷ்டிராவில் மனிதர்களை கொன்று உண்ணும் புலி மின்வேலியில் சிக்கி மரணம்.
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 4 கிராமப்புற மனிதர்களை கொன்று தின்ற பெண்புலி ஒன்று பிரம்மாபுரி அருகே கிராமத்தினர் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தப் புலியை சுட்டுக்கொல்ல நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப்புலி முதலில் 2 பேரை கொன்றிருந்த நிலையில் வனத்துறையினர் பிடித்து அதன் கழுத்தில் அதன் நடமாட்டத்தை கண்டறியும் கருவியை பொருத்தி நடுக்காட்டில் விட்டு வந்தனர். அதன் பிறகும் அந்தப் புலி மேலும் 2 பேரை கொன்று ருசித்தது. இந்தப்புலிக்கு 'காலா' என்ற பெயரை கிராமத்தினர் சூட்டியிருந்தனர்.
இதற்கு முன் கடந்த வருடம் இதே அக்டோபர் மாதத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் 3 பேரை கொன்ற புலியை வனத்துறையினர் 'ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில்' சுட்டுக் கொன்றனர். இறந்த புலியின் உடலை தூக்கிக் கொண்டு கிராமத்தினர் சுமார் 3 மணிநேரம் வெற்றிவிழா நடத்தியதும் நடந்தேறியுள்ளது.
பொதுவாக புலிகள் ஒருமுறை மனிதனை வேட்டையாடி ரத்தத்தை சுவைத்துவிட்டால் பிறகு அதன் பேச்சை அதுவே கேட்காதாம் பிறகு ஒரே நரவேட்டை தானாம்.
2014 ஆம் வருடக்கணக்கின்படி, இந்தியாவில் சுமார் 2,226 புலிகள் வாழ்கின்றன அதாவது உலக புலித்தொகையில் சரிபாதி. இவற்றில் சராசரியாக வருடத்திற்கு 1 டஜன் புலிகள் இறக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோத வேட்டைக்காரர்களால் கொல்லப்படுபவை.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.