தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் ஆகியன இணைந்து, நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு, பள்ளி முதல்வர் மீனா குமாரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஓ.கே.எம் ஷிபஹத்துல்லா முகாமை தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவர்கள் 925 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில், பள்ளி துணை முதல்வர் ஜே.சபிதா, பள்ளி நிர்வாக அலுவலர் அஸ்ரப் அலி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க இணைச்செயலர் எம்.எஃப் முகமது சலீம், சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் அகமது அனஸ், சேக்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




நிலவேம்பு கசாயம் ... நிலவேம்பு கசாயம் ... எல்லாஇடத்திலும் வழங்கப்படுகிறது.., டெங்கு காரணமாக... அதிகமாக உயிரிழப்பு., இதற்க்கெல்லாம் காரணம் " கொசு " என்று தெரிந்தும் அதற்கான ஒழிப்பு - அழிப்பதற்கு முயற்சி ரொம்ப குறைவு., அரசு தன் பங்கிற்கு புகையை எல்லா பகுதியிலும் செலுத்தினாலும் துளிக்கூட குறையவில்லை., இதற்கெல்லாம் காரணம் நாம் தான்., பிளாஸ்டிக் - மட்டை - வேஸ்ட் பேப்பர் - சிரட்டை இவைகளை ஓடும் தண்ணீரில் போட்டு விடுகிறோம்.
ReplyDeleteமங்கும் குப்பை மங்கா குப்பை என்று பிரித்து வைத்தாலும் அல்ல ஆள் வருவதில்லை., குப்பை கூண்டு இருந்தும் அதில் குப்பையை போடாமல் அதன் வெளியில் போட்டு விடுகிறோம்., காற்று மாசு படுகிறது என்று யாராவது உணர்கிறார்களா? ஏற்கனவே 2 வீலரால் அதிகமாக காற்று மாசுபடுகிறது இதில் குப்பை வேறு., நோயை உற்பத்தி படுத்துகிறோம் என்று உணர்ந்தால் தான் வாழும் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் .