அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே அமைந்துள்ள ஆலடிக்குளத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த (அக்.6 ) வெள்ளிக்கிழமை தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது ஆலடிக் குளம். அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை பிரதான சாலையின் வரவேற்பு பகுதியின் அருகில் அமைந்துள்ள இக்குளம், நூறாண்டுகள் கடந்து மிகவும் பழமை வாய்ந்தது. இக்குளத்திற்கு நீர் ஆதாரமாக, சி.எம்.பி வாய்க்கால் மூலம் ஆற்று நீரும், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், அதிராம்பட்டினம் அருகே உள்ள நசுவுனி ஆற்று ஓடையில் இருந்து பம்பிங் மூலம் நீர் இறைத்து நிரப்பப்படும். இதனால், இப்பகுதியின் நீர் ஆதாரத்தை அதிகரிக்கவும், பொதுமக்கள் நீராடி மகிழவும் பெரிதும் உதவுகிறது.
இந்நிலையில், குளத்தின் மையப்பகுதி சேரும், சகதியுமாகவும், கடந்த 1946 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, பழமை வாய்ந்த 6 படித்துறைகள் மிகவும் பழுதடைந்தும், குளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்பு இல்லாததால், இப்பகுதி வழியே செல்லும் ஆடு, மாடுகள் குளத்தில் தவறி விழுவதும், வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதும் நடந்து வந்தது. மேலும், குளத்தில் குப்பைகள் கொட்டுவதும், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குளத்தில் கலப்பதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.
இந்நிலையில், முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டியினரின் அறிவுரையின் பேரில், இப்பகுதி தன்னார்வலர்கள் குளத்தை புனரமைக்கும் பணிகளை கடந்த (அக்.6) வெள்ளிக்கிழமை முதல் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்டமாக, சுமார் ரூ. 10 லட்சம் திட்ட மதிப்பீட்டில், குளத்தைச் சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைப்பது, குளத்தின் மேற்கு பகுதியில் நடைமேடை அமைத்து, அதில், பூங்கா அமைப்பது, மின் விளக்குகள், குடிநீர் வசதி, முதியோர் இளைப்பாற தனி இருக்கைகள் ஆகியவற்றை ஏற்படுத்துவது, பசுமையை வலியுறுத்தி, குளத்தின் கிழக்கு பகுதியில், மரங்கள், செடிகள் நட்டு அவற்றை பராமரிப்பது, குப்பைகள், கழிவு நீர் குளத்தில் கலப்பதால் ஏற்படும் மாசுபாட்டினை தடுப்பது, மழை நீர் சேகரிப்பு ஆகிய திட்டங்களுடன் பணிகள் நடைபெற உள்ளது. தற்போது, முதல் கட்டமாக, பொக்கலைன் இயந்திரம் மூலம் குளத்தைச் சுற்றி மணல் நிரப்பி அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் ஆதாரத்தை அதிகரிப்பது, விபத்து தடுப்பு, பசுமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, குளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், பயணிகள், பொதுமக்கள் அனைவரையும் வரவேற்கும் எல்லைப்பகுதியின் அருகில் அமைந்துள்ள இக்குளத்தை, அதிராம்பட்டினத்தின் சிறந்த அடையாளங்களுள் ஒன்றாக மேம்படுத்த இருப்பதாகவும், சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க இரவில் பூங்காவின் கேட்டை பூட்டிவிடவும், பகலில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட, ஊழியர் ஒருவரை நியமிக்கத் திட்டம் உள்ளதாக, பணிகளை ஆர்வமாக எடுத்துச் செய்யும் தன்னார்வலர் ஏ.கே. அகமது ஜலீல் தெரிவித்தார். மேலும், அரசு சார்பில் பூங்காவிற்கு எல்.இ.டி மின் விளக்குகள் அமைத்து தரவும், வறட்சி காலங்களில், குளத்தின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் பம்பு செட் அமைத்து தர வேண்டுகோள் விடுத்தார்.
ஆலடிக்குளம் புனரமைக்கும் பணியில், பங்கு பெற எண்ணும் நல்லுள்ளங்கள் கீழ்கண்ட முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாக நிதி உதவியை செலுத்தலாம்.


















அருமையானபதிவு
ReplyDeleteவாழ்த்துக்கள்
அருமையானபதிவு
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ReplyDeletePls ensure the quality of the project
ReplyDeleteCongratulations on the development of our century Old pond...great work
ReplyDelete