உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை அமைத்திட வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே 2 வது நாளாக இன்று திங்கட்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
திமுக சார்பில்...
திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பா.இராமநாதன், திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலர் இராம.குணசேகரன், அவைத்தலைவர் ஜே.சாகுல்ஹமீது, துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், ஒன்றிய பிரதிநிதிகள் ஏ.எம் அப்துல் ஹலீம், முல்லை ஆர்.மதி, மாவட்ட பிரதிநிதிகள் மீராஷா. பகுருதீன், இன்பநாதன், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் டி.சபீர், மாளியாக்காடு முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் ரமேஷ், ஏரிப்புறக்கரை ஊராட்சிமன்ற முன்னாள் துணைத்தலைவர் நாகூரான் உள்ளிட்ட திமுகவினர் பலரும்,
காங்கிரஸ் கட்சி சார்பில்...
அதிராம்பட்டினம் காங்கிரஸ் கட்சித் முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், அதிரை காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ். கார்த்திகேயன், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் ஏ கோவிந்தன், எஸ்.எஸ் காசிம், பி.திலகராஜ் கட்டபொம்மன், எஸ். சம்பத், எம்.ராஜேந்திரன், எஸ்.சேக்தாவூது, கே.ராஜா உள்ளிட்டோரும்...
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில்...
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், பொருளாளர் ஷேக் அப்துல்லாஹ், மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது, மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் எம்.கே.எம் அபூபக்கர் உள்ளிட்டோரும்...
மனிதநேய மக்கள் கட்சி சார்பில்...
தமுமுக/மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, மூத்த உறுப்பினர் சாந்தா சாகுல் ஹமீது, எஸ்.சேக்காதியார், முகமது தமீம், ஊடகப்பிரிவு பொறுப்பாளர் எம்.ஆர் முகமது ஹாலித், தொழிலாளர் அணி பொறுப்பாளர் ஹக்கீம், வர்த்தக அணி பொறுப்பாளர் நெய்னா முகமது உள்ளிட்ட பலரும்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்...
அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என்.காளிதாஸ், ஹாஜா முகைதீன், பி.ஆர் நாதன், வி. ராமலிங்கம், க.பிச்சை முத்து, பன்னீர் செல்வம், ஏ.எச் பசீர், முகமது இக்பால், நிஜாம் உள்ளிட்டோரும்...
திமுகவின 75, காங்கிரசார் 10, மனிதநேய மக்கள் கட்சி 12, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 7, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10, உட்பட 117 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.