அதிரை நியூஸ்: ஜூலை 04
அமீரகம் ராஸ் அல் கைமா நகரிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தினமும் 3 பேருந்து சேவை ஆரம்பம்
ராஸ் அல் கைமாவிலுள்ள ஜெபல் ஜெய்ஸ் (Jebel Jais) எனும் மலைப்பிரதேசம் பிரசித்திபெற்றதொரு சுற்றுலா தலமாகும். இங்கு செல்வதாக இருந்தால் கார், பைக் போன்ற வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையிருந்தது. தற்போது ராஸ் அல் கைமாவின் சுற்றுலாத்துறை ராஸ் அல் கைமாவின் முக்கிய இடங்களிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தினமும் 3 ஷட்டில் பேருந்துகளை இயக்குகின்றது.
போக 20 திர்ஹம், வர 20 திர்ஹம் என டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஷட்டில் பேருந்துகள் ராஸ் அல் கைமாவின் சிட்டி சென்டர், அல் ஹம்ரா, அல் மர்ஜான் தீவு வழியாக ஜெபல் ஜெய்ஸ் மலையை சென்றடையும். அங்குள்ள உலகின் மிக நீளமான தொங்கு கயிறு சாகசம் (The world's longest zipline) மற்றும் உச்சி மேடையிலிருந்து 360 டிகிரி சுற்றில் பார்க்குமிடம் (360-degree panoramic views from the Viewing Deck Park) ஆகியவற்றிற்கு செல்லலாம்.
பஸ் டிக்கெட் முன்பதிவிற்கு... www.jebeljais.ae/shuttlebus
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.