தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறித்த மீளாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
கடந்த ஆண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் 80 சதவிகிதத்திற்கு குறைவாக தேர்ச்சி விகிதம் பெற்ற 57 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமையாசிரிகள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்திடவும், மாணவ மாணவியர்களுக்கு புரியும் வண்ணம் செயல்முறை வகுப்புகள் நடத்திடவும், மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் கற்றுத் தரும் முறைகளில் மாற்றம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். சரிவர பள்ளிக்கு வராத மாணவர்கள் மற்றும் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்கள் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்து மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு மேற்கொண்டும், மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வர நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.