.

Pages

Friday, November 30, 2018

அமீரக 47-வது தேசிய தினம் ~ துபையில் இலவச பார்க்கிங் மற்றும் பொது போக்குவரத்து நேரங்கள் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: நவ.30
அமீரக 47 வது தேசிய தினத்தை முன்னிட்டு துபையில் இலவச பார்க்கிங் மற்றும் பொது போக்குவரத்து நேரங்கள் அறிவிப்பு

அமீரகத்தின் 47வது தேசிய தினம் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி துபை போக்குவரத்து துறை பார்க்கிங், பொது போக்குவரத்து மற்றும் வாடிக்கையாளர் மையங் செயல்படுவதை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துபை போக்குவரத்து துறையின் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் நவ. 30 வெள்ளி முதல் டிச. 3 ஞாயிறு வரை மூடப்பட்டிருக்கும். டிச. 4 ஆம் தேதி முதல் வழமைபோல் இயங்கத் துவங்கும். எனினும் உம்மு ரமூல் ஸ்மார்ட் சென்டர் மற்றும் துபை போக்குவரத்து துறையின் தலைமை அலுவலகம் ஆகியவை தொடர்ந்து இயங்கும்.

பார்க்கிங்:
டிச. 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பார்க்கிங் ஸ்லாட்டுகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றாலும் அடுக்குமாடி வாகன நிறுத்தங்களில் வழமைபோல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும்.

ரெட் லைன் மெட்ரோ:
நவ 30 வெள்ளிக்கிழமை – காலை 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
டிச 1,2 சனி, ஞாயிறு – காலை 5 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
டிச 3 திங்கள் - காலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை

கிரீன் லைன் மெட்ரோ:
நவ 30 வெள்ளிக்கிழமை – காலை 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
டிச 1,2 சனி, ஞாயிறு – காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
டிச 3 திங்கள் - காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை

துபை டிராம்:
நவ 30 வெள்ளிக்கிழமை – காலை 9 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
டிச 1,2,3 சனி, ஞாயிறு மற்றும் திங்கள் – காலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை

துபை RTA பஸ்:
கோல்டு சூக் - காலை 4.25 மணிமுதல் நள்ளிரவு 12.29 மணிவரை
அல் குபைபா (பர்துபை) – காலை 4.14 முதல் நள்ளிரவு 12.33 மணிவரை
சத்வா – காலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரை, என்ற சேவை மட்டும் 24 மணிநேரமும் இயங்கும்.

அல் கிஸஸ் - காலை 5 மணிமுதல் இரவு 11.45 மணிவரை
அல் கோஸ் இன்டஸ்ட்ரியல் - காலை 5 மணிமுதல் இரவு 11.35 மணிவரை
ஜெபல் அலி – காலை 5 மணிமுதல் இரவு 11.30 மணிவரை

மெட்ரோ நிலைய பஸ்கள்:
அல் ராஷிதியா, மால் ஆப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, புரூஸ் கலீபா, அபூஹயில், எதிஸலாத் நிலையங்களிலிருந்து காலை 5 மணிமுதல் நள்ளிரவு 1.10 மணிவரை பஸ்கள் இயங்கும் என்றாலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரத்தை அனுசரித்து நேரங்கள் சற்று முன்பின்னே இருக்கும்.

இன்டர்சிட்டி பஸ்கள்:
அல் குபைபா (பர்துபை) - ஷார்ஜா (ஜூபைல்) இடையே 24 மணிநேரமும்
துபை – அபுதாபி இடையே அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 12.01 வரையும்

யூனியன் ஸ்கொயர் - காலை 4.30 முதல் நள்ளிரவு 12.30 மணிவரையும்
அல் சப்கா – காலை 6.15 முதல் நள்ளிரவு 12 மணிவரையும்
தேரா சிட்டி சென்டர் - காலை 6.07 மணிமுதல் இரவு 10.07 மணிவரையும்
குராமா – காலை 6.10 மணிமுதல் இரவு 10.10 மணிவரையும்
அல் அஹ்லி கிளப் - காலை 5.55 மணிமுதல் இரவு 10.15 மணிவரையும் இயங்கும்.

துபைக்கு வெளியிலுள்ள பஸ் நிலையங்கள்:
ஷார்ஜா, தாவூன் - துபை: காலை 5.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரை
அஜ்மான் - துபை: காலை 5 மணிமுதல் இரவு 11.30 மணிவரை
ஃபுஜைரா – துபை: காலை 5.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை
ஹத்தா – துபை: காலை 6.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரையும் இயங்கும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்திலிருந்து மும்பைக்கு கடலடியில் ரயில் விடும் கனவுத்திட்டம்!

அதிரை நியூஸ்: நவ.30
அமீரகம் பல்வேறு அசாத்திய கனவுகளை நிஜமாக்கி வருவது அறிந்ததே இதனடிப்படையில் அமீரகத்தின் ஃபுஜைரா நகரையும் இந்தியாவின் மும்பை நகரையும் இணைக்கும் சுமார் 2,000 கி.மீ தூர அதிவேக கடலடி ரயில் திட்டம் ஒன்றை கனவாக கருக்கொண்டுள்ளது. இந்தத் திட்டம் எப்ப வரும், எப்படி வரும் என யாருக்கும் தெரியாது ஆனால் அமீரகத்தின் பொருளாதார சூழலும் இந்தியாவின் அரசியல் அமைதியும் ஒத்துழைக்குமேயானால் எதிர்காலத்தில் நிஜமாகும் வாய்ப்பும் உண்டு.

அமீரகம் ஏற்கனவே ஹைப்பர்லூப் (HYPERLOOP) எனப்படும் மிக அதிவேக குழாய் வடிவ பயணத்திட்டம், டிரைவரில்லா பறக்கும்கார்கள் என கற்பனைகளை சாத்தியமாக்கும் நடலடிக்கைகளின் இறுதிகட்டங்களில் உள்ளன. மேலும் அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை கடல்வழியாக இழுத்து வந்து குடிநீராக மாற்றும் முன்முயற்சி திட்டம் (PILOT PHASE) ஒன்று சிறியளவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.

இந்த கனவு கடலடி ரயில் திட்டம் சாத்தியமாகும் போது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு மேல் இந்த ரயில் தடத்தை ஒட்டியே இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை பைப் லைன் வழியாக கொண்டு செல்லவும், மாற்று வழியில் இன்னொரு பைப் லைன் மூலம் மஹராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு வடக்கே பாயும் நர்மதை ஆற்றுநீரை ஃபுஜைரா கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Thursday, November 29, 2018

திருச்சியில் நடந்தது போல் சுவீடன் விமான நிலைய கட்டிடத்தில் ஏர் இந்திய விமானம் மோதல்!

அதிரை நியூஸ்: நவ.29
டெல்லியிலிருந்து சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் அர்லண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் பயணிகளை இறக்குவதற்காக டேக்ஸிவேயில் சென்று கொண்டிருந்த போது அதன் இறக்கைகளில் ஒன்று விமான நிலைய கட்டிடம் ஒன்றின் மீது மோதி சேதமடைந்தது.

இந்த விமானத்தில் இருந்த 179 பயணிகளும் விமான ஊழியர்களும் எத்தகைய காயங்களுமின்றி நகரும் படிக்கட்டு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தினை தொடர்ந்து ஸ்டாக்ஹோமிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் திருச்சியிலிலிருந்து துபைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று அங்கிருந்த கண்காணிப்பு கோபுரம் மற்றும் விமான நிலைய சுற்றுச்சுவர்களின் மீது மோதியதில் பலத்த சேதமடைந்த நிலையிலேயே பறந்து சென்ற விமானம் திரும்ப அழைக்கப்பட்டு மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் மாலத்தீவு நாட்டின் மாலி விமான நிலையத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பூர்த்தியாகாத புதிய விமான ஓடுதளத்தில் தவறுதலாக தரையிறங்கியது எனினும் இந்த அனைத்து சம்பவங்களிலும் இறையருளால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதே மிகவும் ஆறுதலளிக்கும் செய்தியாகும்.

Source: the news minute
தமிழில்: நம்ம ஊரான்

இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களை பாதிக்கும் கட்டாய இமிக்கிரேசன் பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

அதிரை நியூஸ்: நவ.29
நடப்பு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இந்தியர்கள் எதிர்வரும் 2019 ஜனவரி 1 முதல் பெருவாரியாக வேலைக்குச் செல்லும் அமீரகம், சவுதி, குவைத், மலேஷியா உள்ளிட்ட 18 இஸ்லாமிய நாடுகளுக்கு செல்வோர் மட்டும் கட்டாயமாக மீண்டும் ஆன்லைன் வழியாக பதிவு செய்து இமிக்கிரேசன் கிளியரன்ஸ் செய்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது

ஏற்கனவே ECNR கிளியரன்ஸ் பாஸ்போர்ட் உடையவர்கள் மற்றும் வேலைபார்த்து வருபவர்கள், முறையாக இமிக்கிரேசன் செய்து கொண்டு தற்போது இஸ்லாமிய நாடுகளில் வேலைபார்த்து வரும் ECR பாஸ்போர்ட் உடையவர்கள், புதிதாக வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் மீண்டும் ஆன்லைன் வழியாக இமிக்கிரேசன் கிளியரன்ஸ் செய்து கொள்ளத் தவறினால் இந்திய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் எச்சரித்திருந்தது ஆனால் ஊழல் பெருச்சாளிகள் தப்பித்து சென்று பதுங்கும் எந்த நாடுகளுக்கும் இத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் மத்திய அரசின் ரகசிய உள்நோக்கம் ஏதுமிருக்குமோ என மக்கள் அச்சப்பட துவங்கினர், குறிப்பாக தென்னிந்தியர்கள்.

இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பலைகள் உருவானதை தொடர்ந்து இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளதுடன் தொடர்ந்து சுய விருப்பத்தின் பேரில் ஆன்லைன் வழியாக இமிக்கிரேசன் கிளியரன்ஸ் பதிவும் செய்து கொள்ளலாம் என்ற சுய விருப்பு சலுகையையும் வழங்கியுள்ளது. வெளியுறவுத்துறையின் இந்த உத்தரவை அமீரகத்திற்கான இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி அபுதாபியில் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த சட்டம் குறித்து துபையில் சட்ட ஆலோசணை நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிந்து சுரேஷ் செட்டூர் என்பவர் கூறியதாவது, இந்திய அரசின் இந்த உத்தரவு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியக் குடிமகன் ஒருவரின் சுதந்திரமான பயணத்தை தடுத்து நிறுத்த முறையான சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லது நீதிமன்ற உத்தரவை பெற்றிருக்க வேண்டும் அதைவிடுத்து ஆன்லைனில் பதிவு செய்யாத ஒருவரின் பயணத்தை தடுத்து நிறுத்த எந்த சட்டப்பூர்வ அனுமதியும் கிடையாது என்றார்.

அபுதாபியில் இயங்கும் கேரள சோஷியல் சென்டரின் தலைவர் ஏ.கே. பீரான் குட்டி தெரிவித்ததாவது, பயணியின் சுய விபரங்களும், வேலைவாய்ப்பு குறித்த விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது ஏன்? இந்தியாவில் பொதுத்தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் திரட்டப்படும் இந்தத் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு என அச்சம் தெரிவித்திருந்தார்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ அல்ஹாஜ் கே. ரியாஸ் அகமது

அதிரை நியூஸ்: நவ.29
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம். காசிம் மைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் எஸ்.எம்.ஏ இபுராஹிம் அவர்களின் மருமகனும், அல்ஹாஜ் கே. அகமது மன்சூர், அல்ஹாஜ் கே. ராஜிக் அகமது ஆகியோரின் சகோதரரும், ஹாஜி என் ஹாஜா சரீப், ஹாஜி எம்.எஸ் முகமது மீராசாஹிப் ஆகியோரின் மாமனாரும் ஹாஜி ஆர். காசிம் சரீப்  அவர்களின் தகப்பனாருமாகிய அல்ஹாஜ் கே. ரியாஸ் அகமது அவர்கள் புதன்கிழமை இரவு புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (29-11-2018) வியாழக்கிழமை மாலை அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, November 28, 2018

துபையில் ஸ்மார்ட் பார்க் ஆக மாறிய அல் மம்ஸர் பீச் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.28
துபை அல் மம்ஸர் பீச் பார்க் பல்வேறு நவீன வசதிகளுக்குப் பின் ஸ்மார்ட் பார்க் ஆக மாற்றம்

துபை அல் மம்ஸர் பார்க் (Al Mamzar Beach Park) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் புத்தாக்க தொழிற்நுட்பங்களை (Innovative Technologies) பயன்படுத்தி பல்வேறு நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் பீச் பார்க்காக நவீனமயமடைந்துள்ளது.

ஏற்கனவே நோல் கார்டுகளை பயன்படுத்தி உள்நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அல் மம்ஸர் பார்க்கிற்கென பிரத்தியே ஆப் (Al Mamzar Park App) ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பார்பீக் கிரில் (BBQ) எனப்படும் கறிகளை சுட்டு தயாரிக்கப்படும் உணவுகளுக்காக 15 பிரத்தியேக பகுதிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மம்ஸர் ஆப் வழியாக விர்ச்சுவல் தொழிற்நுட்பம் (Virtual Technology) மூலம் முழுமையாக சுற்றிப்பாக்கலாம் மேலும் குழந்தைகளுக்கு மரம் செடி கொடி வளர்ப்பில் ஆர்வமூட்டுவதற்காக விர்ச்சுவல் காட்சிகளின் வழியாக விவசாய பாடமும் உள்ளது. இங்கே பூசப்பட்டுள்ள பெயிண்டுகள் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடுகளை உறிஞ்சி எடுக்கும் தன்மை  கொண்டவை.

இங்குள்ள 5 கடற்கரை பகுதிகளுக்கும் சதஃப், நவ்ரஸ், பிளமிங்கோ, தானா மற்றும் முர்ஜான் எனப் பெயரிடப்பட்டள்ளதுடள் கூடுதலான குளியல் அறைகள், நிழற்குடைகள், உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு என கூடுதலான சிறப்பு கார் பார்க்கிங், அவர்கள் கடற்கரைக்கு செல்வதற்கான சிறப்புப் பாதைகள் என ஒதுக்கப்பட்டுள்ளன.

மம்ஸர் பார்க் போன்று துபையின் பிற பார்க்குகளும் விரைவில் நவீனமடைய உள்ள நிலையில், மக்களின் உடல்நலத்தை பேணிடும் வகையில் இங்கு அடிக்கடி பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் இருக்கைகள் (பெஞ்சுகள்) இலவச வைபை வசதியையும், இலவச மொபைல் சார்ஜிங் வசதியையும் வழங்கும். மொபைல் போன்களை சார்ஜ் செய்ய அந்த பெஞ்சின் மீது மொபைலை வைத்தாலே போதுமானாது தானே சார்ஜ் ஆகிவிடும், ஓயர்கள், யுஎஸ்பிக்கள், சார்ஜர்கள் என எதுவும் தேவையில்லை.

ஸ்மார்ட் கைப்பட்டியாகவும் கடிகாரமாகவும் (Smart Band) செயல்படும் இந்த கருவியில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு குழந்தைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அணிவிக்கப்படுவதால் அவர்கள் எந்நேரமும் கண்காணிப்பில் இருப்பர். அவசியமான நேரத்தில் கைப்பட்டி அணிந்தவர்களும் நம்மை அழைத்து பேச முடியும், இந்த கைப்பட்டி அணிந்தவர்களை தங்கள் ஸ்மார்ட் போனுடன் இணைத்து அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பூங்கா காவல் பொறுப்பாளர்களும் (Caretakers) அழைத்து பேச முடியும்.

ஸ்மார்ட் ஓயஸீஸ் என பூங்காவினுள் அமைக்கப்பட்டுள்ள 2 மையங்களில் (Smart Oasis Hub) காற்றில் கலந்துள்ள ஈரப்பதம் உறிஞ்சி எடுக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகின்றது. இதற்கான மின்சக்தி முழுக்க முழுக்க சூரியஒளி மின்தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் ஓயஸீஸில் தினமும் 90 லிட்டர் குடி தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகின்றதுடன் இது ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்யும் மையமாகவும், வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்கள் மீது மெல்லிய தண்ணீரை விசிறியடிக்கும் பணியையும் மேற்கொள்கின்றது.

இங்குள்ள குட்டி விமானங்களான டிரோன்கள் மூலம் தினமும் செடி கொடி மரங்கள் மேலிருந்தவாறு ஸ்கேன் செய்யப்பட்டு அவற்றை நோய் ஏதும் தாக்கியிருக்கின்றதா எனவும், அவை வெளியிடும் கரியமில வாயுவின் அளவும் வெப்ப வரைபடங்கள் மூலம் பகுப்பாய்வுகள் செய்யப்படுகின்றன.

பிக் பெல்லி (Big Belly) எனப் பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட் குப்பை தொட்டிகள் நிறைந்தவுடன் தானாகவே அதுகுறித்த தகவல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி துப்புரவாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதேபோல் ஸ்மார்ட் ரெஸ்க்யூ (Smart Rescue) என்ற திட்டத்தின் வழியாக குளிக்கும் போது கடலில் சிக்கி தத்தளிப்பவர்களை காப்பாற்ற இங்குள்ள குட்டி விமானங்களே சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்ணீரில் மிதக்கும் பாதுகாப்பு வளையங்களை (Lifebuoy Rings) கொண்டு சென்று கொடுத்து உதவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

கஜா புயலுக்கு பின் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.28
கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக டெல்டாவின் கடைமடைப் பகுதி அதிராம்பட்டினம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 100 அடி உயர சிக்னல் கோபுரம் கீழே சாய்ந்து விழுந்தது. மேலும், ரயில் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி பறந்து சேதமடைந்தது.

கஜா புயலுக்கு பின் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்துவந்த நிலையில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் பணிகள் சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளது.

தற்போது ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு, மழை நீர் வடிகால், பயணிகள் கழிப்பறை கட்டுமானம், தண்டவாளங்களில் ஜல்லிகள் நிரப்புதல், தண்டவாளங்கள் இணைப்பு, டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான, நடைமேடை தடுப்பு சுவர், நடைமேடை தளம், மேற்படிக்கட்டு தளம், கேட் கீப்பர் அறை மற்றும் கேட் அமைக்கும் பணி ஆகியவை மும்முரமாக நடைபெறுகின்றன.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது;
'திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. கஜா புயலின் காரணமாக ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேத பகுதிகள் சீர் செய்யப்பட உள்ளது. எனவே, பணிகளை நிறைவு செய்வதில் ஓரிரு மாதங்கள் தாமதம் ஏற்படலாம்' என தெரிவித்தது.

அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
ஏ.சாகுல் ஹமீது

மரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள்

அதிரை நியூஸ்: நவ.28
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் 'தங்கப்பல்' முகமது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எஸ்.எம்.ஏ சேக்தாவூது, எஸ்.எம்.ஏ இப்ராஹிம்ஷா ஆகியோரின் சகோதரியும், முத்தலிப், ஜாஹிர் உசேன் ஆகியோரின் மாமியாரும், அப்துல் ரெஜாக் அவர்களின் தாயாருமாகிய ஆமீனா அம்மாள் அவர்கள் செவ்வாய்கிழமை இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (28-11-2018) புதன்கிழமை காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Thursday, November 15, 2018

கஜா புயல் ~ அதிராம்பட்டினம் நிலவரம் !

அதிராம்பட்டினம், நவ.15
கஜா புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தின் கடலோரப்பகுதியான அதிராம்பட்டினத்தில் கஜா புயல் தொடர்பான நிலவரம் மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு;
1. இரவு 8 மணி முதல் குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது லேசான தூறல் மழை பெய்தது. பின்னர், இரவு 9 மணி முதல் மிதமாக மழை பெய்து வருகிறது. மழை பொழிவது படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. இரவில், மணிக்கு 100 ~ 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. அதிராம்பட்டினம் கடலோர தாழ்வானப் பகுதிகளின் குடிசை மற்றும் ஆஸ்பிடால் சீட் கூரை வீட்டில் வசிக்கும் முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிராம்பட்டினம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் இரவில் தங்குவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அங்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4. இரவு 9 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினம் பகுதிகளில் மின்தடை ஏற்படவில்லை.

5. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், கோழி உள்ளிட்ட வீட்டுப் பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

6. அவசர உதவிக்கு 1077 என்ற கட்டணமில்ல தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

7. புயல் மற்றும் மழை தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், 100 என்ற எண்ணில் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், 101 என்ற எண்ணில் தீயணைப்பு துறை கட்டுபாட்டு அறைக்கும் தெரிவிக்கலாம்.

8. மேலும், பாதிப்புகள் குறித்த புகார்களை 04373-235049 என்ற எண்ணில் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

கஜா புயல் ~ அதிராம்பட்டினத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சிறப்பு பார்வையாளர் ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.15
அதிராம்பட்டினம் கடலோரப்பகுதியில் கஜா புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மை செயலாளருமான பிரதீப் யாதவ் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு பணிகளை இன்று வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

இதில், அதிராம்பட்டினம் மற்றும் ராஜமடம் ஆகிய இடங்களில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அங்கு ஜெனேரட்டர் தயார் நிலையில் உள்ளதையும், ராஜாமடம் கடலோரப் பகுதி பொதுமக்களிடம் பாதுகாப்பான இடங்களில் தங்கும் படியும் அறிவுறுத்தினர்.
 

மரண அறிவிப்பு ~ அகமது ஹாஜா (வயது 84)

அதிரை நியூஸ்: நவ.15
அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் தலையாட்டி நெய்னா முகமது சாஹிப் அவர்களின் மகனும், சாகுல் ஹமீது, யாக்கூப் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் செ.மு அப்துல் ரெஜாக், மர்ஹூம் காதர் முகைதீன், மர்ஹூம் சரபுதீன், பஷீர் அகமது ஆகியோரின் மைத்துனரும், முகைதீன் சாஹிப் (அதிரை மெய்சா), ஜலாலுதீன், இலியாஸ், பகுருதீன், ஜெஹபர் சாதிக், அஸ்ரப் அலி, பைசல் அகமது ஆகியோரின் மாமாவும், முகமது சேக் அவர்களின் தகப்பனாருமாகிய அகமது ஹாஜா (வயது 84) அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (16-11-2018) வெள்ளிக்கிழமை காலை  9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

துபை அல் பர்ஷா ஹெயிட்ஸ் பகுதியில் மணிக்கு 4 திர்ஹம் பார்க்கிங் கட்டணம் அமல்!

அதிரை நியூஸ்: நவ.15
எதிர்வரும் நவம்பர் 17 ஆம் தேதி சனிக்கிழமை முதல் டீகாம் நிறுவனத்துடன் (Tecom) செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அல் பர்ஷா ஹெயிட்ஸ் (Al Barsha Heights) பகுதி பார்க்கிங் ஸ்லாட்டுகளில் மணிக்கு 4 திர்ஹமும், அரை மணிக்கு 2 திர்ஹமும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்த உத்தரவு சீஸனல் பார்க்கிங் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என துபை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த பார்க்கிங் ஸ்லாட்டுகளை அடையாளப்படுத்துவதற்காக Code 'A' என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டிருக்கும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

அரசு பள்ளிக்கு தூய்மை விருது!

பேராவூரணி நவ.15-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தமிழக அரசின் தூய்மை பள்ளிக்கான மாவட்ட அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை வட்டார வளமையத்தில் புதன்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சின்னையன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் வீரம்மாள், சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர் ராமநாதன், மற்றும் பள்ளி மாணவி அருந்ததி ஆகியோரிடம், தூய்மை பள்ளிக்கான விருதினை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி வழங்கினார்.

அப்போது ஒரத்தநாடு கல்வி மாவட்ட அலுவலர் ந.காமராசு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ், மாவட்ட கட்டிடப் பணி ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் பட்டுக்கோட்டை பாக்கியராஜ், பேராவூரணி ரெ.பரமசிவம், ஆசிரியர் பயிற்றுனர் அ.முருகேசன். ஆகியோர் உடன் இருந்தனர்.

தூய்மைப்பள்ளி விருது பெற்ற பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் து.முருகேசன், சிவலிங்கம், முத்துவேல், அன்பழகன், டாக்டர் டி.நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

துபையில் ஒரு நாள் (ஞாயிறு) மட்டும் இலவச பார்க்கிங் மற்றும் இதர போக்குவரத்து சேவை பற்றிய அறிவிப்பு!

அதிரை நியூஸ்: நவ.15
துபையில் ஞாயிற்றுகிழமை மட்டும் இலவச பார்க்கிங் மற்றும் இதர போக்குவரத்து சேவை பற்றிய அறிவிப்பு.

துபையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மிலாதுந்நபி பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து துபை போக்குவரத்துத் துறை (RTA) வாடிக்கையாளர்கள் மையங்கள், கட்டண பார்க்கிங், பஸ், மெட்ரோ, டிராம், நீர்வழி போக்குவரத்துக்கள் நிலையங்கள் திறப்பு குறித்து அறிவித்துள்ளது.

கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் (customer happiness Center) எனப்படும் வாடிக்கையாளர் மையங்கள்:
உம்மு ரமூல் (Umm Ramool) மற்றும் RTA தலைமையகம் ஆகியன வழமைபோல் ஞாயிறன்றும் இயங்கும் இவ்விரு இடங்கள் தவிர்த்த பிற கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்களும் ஞாயிறு அன்று அடைக்கப்பட்டிருக்கும், திங்கட்கிழமை வழமைபோல் பணிகள் நடைபெறும்.

கட்டண பார்க்கிங் ஸ்லாட்டுகள்:
ஞாயிறு அன்று கட்டண பார்க்கிங் இலவசமே என்றாலும் அடுக்குமாடி பார்க்கிங்குகளில் வழமைபோல் ஞாயிறு அன்றும் கட்டணம் வசூலிக்கப்படும். திங்கட்கிழமை காலை முதல் மீண்டும் பார்க்கிங் கட்டண சேவை தொடரும்.

மெட்ரோ – ரெட் லைன்:
காலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை செயல்படும்.

மெட்ரோ – கிரீன் லைன்:
காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை செயல்படும்.

துபை டிராம்:
காலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாளின் துவக்கம்) செயல்படும்.

பஸ் சேவைகள்:
கோல்டு சூக் பஸ் நிலையம்- அதிகாலை 4.25 மணிமுதல் நள்ளிரவு 12.29 மணிவரையும்,

அல் குபைபா பஸ் நிலையம் (பர்துபை) – அதிகாலை 4.14 முதல் நள்ளிரவு 12.33 மணிவரையும்,

சத்வா பஸ் நிலையம் - தடம் எண் C01 மட்டும் 24 மணிநேரமும் செயல்படும் மற்றவை அதிகாலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரையும்,
அல் கிஸஸ் பஸ் நிலையம் - அதிகாலை 5.00 மணிமுதல் முதல் இரவு 11.45 மணிவரையும்,

அல் கோஸ் இன்டஸ்ட்ரியல் பஸ் நிலையம் - அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.35 மணிவரையும்,

ஜெபல் அலி பஸ் நிலையம் - அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

மெட்ரோ இணைப்பு (Metro Feeder Buses) பஸ் நிலையங்களான அல் ராஷிதியா, மால் ஆப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, புரூஜ் கலீபா, அபுஹாயில் மற்றும் எதிஸலாத் ஆகியவை அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12.20 மணிவரையும் செயல்படும்.

இன்டர்சிட்டி பஸ் சேவைகள்:
அல் குபைபா (பர்துபை) - ஷார்ஜா இடையே 24 மணிநேரமும்,
அல் குபைபா (பர்துபை) – அபுதாபி இடையே அதிகாலை 4.36 மணிமுதல் நள்ளிரவு 12.01 மணிவரையும்,

யூனியன் ஸ்கொயர் - அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 1.25 மணிவரையும்,

அல் சப்கா நிலையம் - அதிகாலை 6.15 மணிமுதல் நள்ளிரவு 1.30 மணிவரையும்,

டெய்ரா சிட்டி சென்டர் நிலையம் - அதிகாலை 5.35 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

கராமா நிலையம் - அதிகாலை 6.10 மணிமுதல் இரவு 10.10 மணிவரையும்,
அல் அஹ்லீ கிளப் நிலையம் - அதிகாலை 5.55 மணிமுதல் இரவு 10.15 மணிவரையும் செயல்படும்.

துபைக்கு வெளியிலுள்ள RTA பஸ் நிலையங்கள்:
ஷார்ஜா – அல் தாவூன் நிலையங்கள் to துபை - அதிகாலை 5.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரையும்,

அஜ்மான் to துபை - அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

ஃபுஜைரா to துபை – அதிகாலை 5.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையும்,

ஹத்தா to துபை – அதிகாலை 6.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரையும் செயல்படும்.

நீர்வழி போக்குவரத்துக்கள்:
வாட்டர் பஸ் - மரீனா மால், மரீனா வாக், மரீனா டெர்ரேஸ் மற்றும் மரீனா புரோமினேட் ஆகிய படகு நிலையங்களிலிருந்து பகல் 12 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும்,

வாட்டர் டேக்ஸிக்கள் - காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரையும் செயல்படும்.

துபை பெர்ரி (Dubai Ferry):
அல் குபைபா மற்றும் துபை மரீனா படகு நிலையங்களிலிருந்து காலை 11 மணி, பகல் 1 மணி, மாலை 3 மணி, மாலை 5 மணி மற்றும் மாலை 6.30 மணி என இருபுறமும் தலா 5 சேவைகளை வழங்கும்.

அல் ஜத்தாஃப் (Al Jaddaf) முதல் துபை வாட்டர் கேனால் (Dubai Water Canal) வரை பகல் 12 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் 2 சேவைகள் நடைபெறும் மறுபுறம் துபை வாட்டர் கேனாலிலிருந்து அல் ஜத்தாஃபிற்கும் பகல் 2.05 மணிக்கும் மாலை 7.35 மணிக்கும் என 2 சேவைகள் நடைபெறும்.

ஷேக் ஜாயித் ரோடு படகு நிலையத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் அதே இடத்திற்கே வரும் சுற்று சேவைகள் (Round Trip Services)  மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.

Traditional Abra எனப்படும் பாரம்பரிய படகுகளின் போக்குவரத்து துபை கிரீக் படகு நிலையங்களான பனியாஸ், துபை ஓல்டு சூக் மற்றும் அல் சீஃப் நிலையங்களிலிருந்து காலை 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை நடைபெறும். ஷேக் ஜாயித் ரோடு படகு நிலையத்திலிருந்து மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை அப்ரா சேவை நடைபெறும்.

மின்சக்தி படகு சேவைகள் (Electric Abras):
புரூஜ் கலீபா – மாலை 6 முதல் இரவு 11 மணிவரையும்
,
அல் மம்ஸர் - பகல் 2 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும்,

அல் கஸ்ர் ஹோட்டல் படகு நிலையம் முதல் துபை மால் படகு சேவை நிலையம் வரையில் பகல் 12 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

புரூஜ் பிளாஸா படகு சுற்றுச் சேவைகள் பகல் 12 மணிமுதல் இரவு 11.30 மணிவரை நடைபெறும்.

ஏர் கன்டிஷன்டு அப்ராக்கள்: 
அல் ஜத்தாஃப் மற்றும் துபை பெஸ்டிவல் சிட்டி ஆகியவற்றிலிருந்து காலை 7 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரையும் இயங்கும் என துபை போக்குவரத்து துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: RTA Website
தமிழில்: நம்ம ஊரான் 

உம்ரா செய்துவிட்டு ஊர் திரும்பிய 4 வயது சிறுவன் நடுவானில் மரணம்!

அதிரை நியூஸ்: நவ.15
உம்ராவிலிருந்து திரும்பிய 4 வயது கேரள சிறுவன் உடல்நலக் குறைவால் நடுவானில் மரணம்

தாய் தந்தையர் உள்ளிட்ட 11 குடும்ப உறுப்பினர்களுடன் உம்ரா செய்துவிட்டு திரும்பிய நிலையில் உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை மாலை நடுவானில் 4 வயது கேரளச் சிறுவன் யஹ்யா அவர்களின் உயிர் பிரிந்தது, இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் மஸ்கட் வழியாக காலிகட் விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்த போது நடவானில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அபுதாபியில் விமானம் மிக அவசரமாக இறக்கப்பட்டது எனினும் அவர் இறந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவ வட்டாரங்கள் அறிவித்தன.

4 வயது யஹ்யா அவர்கள் பிறவியிலிருந்தே வலிப்பு நோய் பாதிப்பில் இருந்துள்ளார் மேலும் பேசும் திறனற்றும் இருந்துள்ளார் ஆனால் அனைவரையும் ஸ்நேகத்துடன் பார்த்து புன்னகை பூப்பாராம்.

யஹ்யாவுடைய உடலுடன் அவரது தந்தையும் அபுதாபியில் இறங்கிக் கொள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து அதே விமானத்தில் பறந்தனர். இரவோடு இரவாக சிறுவருடைய தூதரகம் சம்பந்தப்பட்ட வேலைகள் மற்றும் சிறுவருடைய ஜனாஸாவை அவரது சொந்த ஊரான கன்னூர் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மாலையே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அன்னாரது பெற்றோர் உற்றோர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தருவானாக! சிறுவரை ஜன்னத் அல் ஃபிர்தவ்ஸில் நுழையச் செய்வானாக!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

கேரளாவில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் ~ டிச.9 ம் தேதி முதல் அபுதாபிக்கு நேரடிச்சேவை!

அதிரை நியூஸ்: நவ.15
டிச. 9 முதல் கேரளாவின் 4வது புதிய விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு விமான சேவை துவங்குகின்றது

எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தின் 4-வது சர்வதேச விமான நிலையமாக திறக்கப்பட்டுள்ள கன்னூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது முதலாவது சேவையை அபுதாபிக்கு ஆரம்பம் செய்கின்றது.

ஆரம்பமாக வாரத்தில் 3 நாட்களுக்கு அதாவது செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கன்னூரிலிருந்து அபுதாபிக்கு சேவை வழங்கப்படும். கன்னூரிலிருந்து இந்திய நேரம் காலை 7 மணிக்கு புறப்படும் விமானம் அபுதாபி நேரம் பகல் 12.30 மணிக்கு வந்து சேரும். மீண்டும் அபதாபியிலிருந்து பகல் 1.30 மணியளவில் புறப்பட்டு இந்திய நேரம் இரவு 7 மணிக்கு கன்னூர் விமான நிலையத்தை சென்றடையும்.

நேற்று செவ்வாய்கிழமை இத்தடத்திற்கான முன்பதிவுகள் துவங்கிய உடனேயே கிட்டதட்ட அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் நேரங்கள் விரைவில் மாற்றப்படவுள்ளதுடன் ஆரம்பமாக அபுதாபி, தோஹா மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கு கன்னூரிலிருந்து விமானச் சேவைகள் துவங்கவுள்ளன, பின்பு படிப்படியாக அமீரகத்தின் இதர விமான நிலையங்கள் உள்ளிட்ட பல சர்வதேச நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஆங் சாங் சூகீக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறிப்பு!

அதிரை நியூஸ்: நவ.15
ரோஹிங்கிய இன அழிப்பிற்காக ஆங் சாங் சூகீக்கு வழங்கப்பட்ட உயரிய விருதை பிடுங்கியது சர்வதேச பொதுமன்னிப்பு சபை

இங்கிலாந்திலிருந்து செயல்படும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச பொது மன்னிப்பு சபை (Amnesty International) மியான்மர் நாட்டில் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு எதிராக அரசு மற்றும் ராணுவத்தின் ஆதரவுடன் நடைபெறும் இனசுத்திகரிப்பு வன்முறைகளுக்கு எதிராக சிறுதுரும்பையும் நகர்த்தாத அதன் ஆட்சியாளர் ஆங் சாங் சூகீக்கு (Aung San Suu Kyi) கடந்த 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'மனசாட்சியின் தூதுவர்' (The Ambassador of Conscience Award) என்ற விருதை மீண்டும் திரும்பப் பெற்றது.

மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் கூட்டுக் கற்பழிப்புகள், கொலைகள், வன்தாக்குதல்கள், சுட்டுக் கொல்லுதல் போன்ற பல பயங்கரவாதங்களை நிகழ்த்திய ராணுவம் ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் சுமார் 720,000 பேர் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இன்று வரை (உண்மையான கணக்கு இதைவிட பலமடங்கு இருக்கும்) நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை இன அழிப்பு என (Act of Genocide) அடையாளப்படுத்தியுள்ளது ஆனால் இதை ஒரு பொருட்டாகவே ஆங் சாங் சூகீ கருதவில்லை, குற்றவாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆங் சாங் சூகீயின் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு எதிரான வன்நடவடிக்கைகளின் காரணத்தினால் 'உங்களை ஒரு நம்பிக்கையின் அடையாளமாக, தைரியமானவராக, மனித உரிமைகளின் பாதுகாவலராக கருத முடியவில்லை' என கடும் கண்டனங்களை தெரிவித்தும், வழங்கிய விருதை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது சர்வதேச பொது மன்னிப்பு சபை. ஆங் சாங் சூகீக்கு இந்த விருது 2009 ஆம் ஆண்டு அவர் மியான்மார் ராணுவ ஆட்சியை ஜனநாயக வழியில் எதிர்த்தால் 15 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் இருந்த போது வழங்கப்பட்டது.

"Today, we are profoundly dismayed that you no longer represent a symbol of hope, courage, and the undying defence of human rights," Amnesty International chief Kumi Naidoo said in a letter to Suu Kyi released by the group.

"Amnesty International cannot justify your continued status as a recipient of the Ambassador of Conscience award and so with great sadness we are hereby withdrawing it from you."

ஆங் சாங் சூகீக்கு கனடா நாடு வழங்கியிருந்த கௌரவ குடியுரிமையை கடந்த மாதம் திரும்பப் பெற்றுக் கொண்டதும், உலகளாவிய பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் வழங்கியிருந்த சிறுசிறு விருதுகள் என பல விருதுகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. ஆங் சாங் சூகீக்கு 1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதும் அதை சுமக்க தகுதியே இல்லாதவள் என்ற நிலையை விரைவில் அடையட்டும், அவமானங்கள் தொடரட்டும்.

Suu Kyi was stripped of her honourary Canadian citizenship over her failure to speak up for the Rohingyas last month. She has also lost numerous smaller awards from individual universities and local and regional governments.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

சென்னையில் அதிரை இளைஞர் முகமது தஹீம் (19) வஃபாத்!

அதிரை நியூஸ்: நவ.15
அதிராம்பட்டினம், ஹாஜா நகரைச் சேர்ந்த மர்ஹும் கே.பி.எம் முகமது சாலிகு, மர்ஹும் எச்.எம் தம்பி மரைக்காயர், எச்.எம் ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் பேரனும், கே.பி.எம் அல் புஷ்ரா அவர்களின் மகனும், எச்.எம் அகமது நியாஸ், எச்.எம் நாசர் கான், எச்.எம் அகமது ரஃபி ஆகியோரின் மருமகனும், ஏ.ஜமீர் அகமது அவர்களின் சகோதரருமாகிய ஏ.முகமது தஹிம் (வயது 19) அவர்கள் நேற்று இரவு சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ எம். காதர் சுல்தான் (வயது 84)

அதிரை நியூஸ்: நவ.15
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது அலியார் அவர்களின் மகனும், மர்ஹூம் கை.செ.மு முகமது சாலிகு அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி டி.பகுருதீன் அவர்களின் சகலையும், மர்ஹூம் எம்.எம். முகமது மீராசாஹிப் அவர்களின் மாமனாரும், கே. இப்ராஹீம்சா, கே. சாகுல் ஹமீது, கே. ஜாஹிர் உசேன் ஆகியோரின் தகப்னாருமாகிய எம். காதர் சுல்தான் (வயது 84) அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (15-11-2018) இரவு இஷா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.