அதிராம்பட்டினம், நவ.14
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நாளை (15.11.2018) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிராம்பட்டினம் கடலோரப்பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முன்னெச்சரிக்கை அறிவிப்பு (காணொளி)
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்பு பணிக்குழு, பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கும் குழு, போக்குவரத்து மேலாண்மை குழு, நீர்வழி மேலாண்மை குழு, செய்தி மேலாண்மை குழு, சுகாதாரம் மற்றும் கழிவு நீர் மேலாண்மை குழு என 7 மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், வருவாய் கோட்ட அளவில் மூன்று குழுக்களும், வட்ட அளவில் 9 குழுக்களும், சரக அளவில் 50 குழுக்களும், கடலோர வட்டங்களில் ஒரு கிராமத்திற்கு 5 குழுக்கள் வீதம் 27 கிராமங்களில் 135 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் 1932 முதல் நிலை உதவியாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையை சேர்ந்த 66 பயிற்சி பெற்ற காவலர்களைக் கொண்ட 4 பேரிடர் மீட்பு குழுவினரும், புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பணியாற்றக்கூடிய 161 தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் 24 படகுகள், அவசர கால ஊர்திகள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் தனியார் அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது. புயல் ஏற்படும் பட்சத்தில் பொது மக்களை தங்க வைக்க 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 8 இதர புயல் பாதுகாப்பு மையங்கள், 28 இதர நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், அரசு பள்ளிகள், சமுதாய கூடங்கள், கிராம சேவை மையங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைகளை பாதுகாக்க 195 கால்நடை பாதுகாப்பு முதல்நிலை உதவியாளர்களும், 36 பாதுகாப்பு மையங்களும், 131 கால்நடை பராமரிப்பு குழுக்களும், புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் 42,000 மணல் மூட்டைகள், 134 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 50 பயிற்சி பெற்ற மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 1758 மெட்ரிக் டன் அரிசி, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் புயல் மற்றும் மழை காலங்களில் வெளியில் செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். வெளிப்புறங்களில் இருக்கும் போது மின்சார கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள், உயர்ந்த கட்டடங்கள், இடிபாடு உடைய கட்டடங்கள் அருகில் செல்வதையும், அறுந்து கிடக்கும் மின்சார கம்பிகள் அருகில் செல்வதையும், மரங்களுக்கு அருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஆறு, குளம், ஏரி ஆகிய நீர் நிலைகளில் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது ஆகிய செயல்களை தவிர்க்க வேண்டும். மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்லக்கூடாது. அவசர காலத்திற்கு தேவையான உணவு, மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். புயல் மற்றும் மழை குறித்த விவரங்களை அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும்.
புயல் மற்றும் மழை தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தஞ்சாவ10ர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், 100 என்ற எண்ணில் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், 101 என்ற எண்ணில் தீயணைப்பு துறை கட்டுபாட்டு அறைக்கும் தெரிவிக்கலாம்.
மேலும், பாதிப்புகள் குறித்த புகார்களை 04362-230456 என்ற எண்ணில் தஞ்சாவூர் வட்டத்திலும், 04362-260248 என்ற எண்ணில் திருவையாறு வட்டத்திலும், 04362-288107 என்ற எண்ணில் பூதலூர் வட்டத்திலும், 04372-233225 என்ற எண்ணில் ஒரத்தநாடு வட்டத்திலும், 0435-2430227 என்ற எண்ணில் கும்பகோணம் வட்டத்திலும், 0435-2460187 என்ற எண்ணில் திருவிடைமருதூர்; வட்டத்திலும், 04374-222456 என்ற எண்ணில் பாபநாசம் வட்டத்திலும், 04373-235049 என்ற எண்ணில் பட்டுக்கோட்டை வட்டத்திலும், 04373-232456 என்ற எண்ணில் பேராவூரணி வட்டத்திலும் உள்ள பொது மக்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.