தஞ்சாவூர் மாவட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஊக்குவிப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (13.11.2018) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
பாரத பிரதமர் அவர்களால் கடந்த 02.11.2018 அன்று தஞ்சாவூர் மாவட்டம் உட்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஊக்குவிப்பு இயக்கம் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் 02.11.2018 முதல் 100 நாட்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் கடன் வசதி ஏற்படுத்தி தருதல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், காப்பீடு செய்தல், சரக்கு மற்றும் சேவை வரி, தொழிலாளர் நலன், தடையில்லா சான்றுகள் பெறுவதற்கான அறிவுரைகள் ஆகிய வசதிகளை ஒருங்கிணைத்து ஏற்படுத்தி தருவதற்கான முகாம்கள் நடைபெறவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நாளை (13.11.2018) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொள்ளும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஊக்குவிப்பு இயக்க முகாம் நடைபெறவுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.