.

Pages

Tuesday, November 13, 2018

அதிராம்பட்டினத்துக்கு வராத காவிரி: விவசாயிகள், பொதுமக்கள் கடும் அதிருப்தி! நாளை (நவ.14) சாலை மறியல் போராட்டம்!

அதிராம்பட்டினம், நவ.13
டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணையும், ஜூலை 22-ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. இந்த இரு அணைகளும் திறக்கப்பட்டு டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணையும், ஜூலை 22-ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. இந்த இரு அணைகளும் திறக்கப்பட்டு சுமார் 4 மாதங்களாகியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினம் பகுதிக்கு இதுவரை காவிரி நீர் வரவில்லை. இதனால் தங்கள் ஊரை தொடர்ந்து புறக்கணிக்கணிக்கும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிராம்பட்டினம் பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எச். அஸ்லம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
குடிநீர் தேவைக்காக அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதியின் ஏரி, குளங்களுக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி, ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கடந்த ஜூலை 23, ஆக. 13 ஆகிய தேதிகளில் மனுக்கள் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆக. 21-ம் தேதி பட்டுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், முதல்கட்டமாக அதிராம்பட்டினத்திலுள்ள 5 குளங்களை 20 நாள்களுக்குள் நிரப்பித் தருவதாக அதிகாரிகள் கையொப்பமிட்டு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். எனினும் அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த செப். 17 -ம் தேதி, அதிராம்பட்டினத்தை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூரில் ஆட்சியரை நேரில் சந்தித்து தண்ணீர் விட வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதன் பின்னரும், அதிரை பகுதிக்கு தண்ணீர் வரதாதால், கடந்த  செப்.24, அக்.15 ஆகிய தேதிகளில் மீண்டும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிடப்பட்டது. இத்தணைக்குப் பிறகும் இதுவரை அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதிக்கு ஆற்று நீர் வந்து சேரவில்லை.

சுமார் 4 மாதங்களாக அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதி தண்ணீர் திறந்துவிடாமல் தொடர்ந்து புறக்கணிக்கும் கல்லணை கால்வாய் உட்கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து, அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதி விவசாயிகள், நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் சார்பில், நாளை (நவ.14) புதன்கிழமை காலை 10 மணியளவில், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் அருகில் (ஈஸ்ட் கோஸ்ட் சாலையில்) மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமென என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.