அதிராம்பட்டினம், நவ.12-
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நடப்பு பருவ வேளாண்மை பணிகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆ.அண்ணாதுரை ஞாயிறு அன்று ஆய்வு மேற்கொண்டார்.
அதிராம்பட்டினம் அடுத்துள்ள உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அக்னி ஆறு உபவடி நிலப்பகுதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை ஆட்சியர் பார்வையிட்டார். அக்கிராமத்தில் உள்ள வயலில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர், தொடர்ந்து புதுப்பட்டினம், வெளிவயல், அடைக்கத்தேவன், விளங்குளம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களை பார்வையிட்டு, அங்குள்ள விவசாயிகளிடம் நேரடி நெல் விதைப்பு செய்யவும், தற்போது பெய்துள்ள பருவ மழையை பயன்படுத்தி உழவுப் பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கினார்.
மேலும் வெளிவயல் பெரிய ஏரியை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், நீர்வரத்துக்கான ஆதாரம் மற்றும் பாசனப் பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். உணவு தானிய உற்பத்தி இலக்கினை கருத்தில் கொண்டு, பயிர்ப் பரப்பினை ஒத்திசைவு செய்து சாதனை இலக்கை அடைய வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஜஸ்டின் மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வித்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.