.

Pages

Sunday, November 4, 2018

அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பருக்குள் நிறைவு (முழு விவரம்)

அதிராம்பட்டினம், நவ.04
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களாக மழை பெய்து வந்த நிலையில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்து உள்ளது. அதன் எஞ்சிய பகுதியான, திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வரையிலான 74 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான 25 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் கடந்த அக்.26 ந் தேதி நடைபெற்றது.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது;
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் வரும் டிசம்பருக்குள் நிறைவு பெற இருப்பதாகவும், இந்த முழு திட்டத்திற்கான செலவு சுமார் ரூ.500 கோடி எனவும், மேலும், 14 பெரிய பாலங்கள், 202 சிறிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும், தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் ரயில் நிலையங்கள் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை வரும் டிசம்பரில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதில், தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவார் எனவும் தெரிவித்தன.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் பற்றிய செய்தி துளிகள்...
1. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 80 சதவித கட்டுமானப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது எனவும், எஞ்சிய அனைத்து பணிகளும் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

2. பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

3. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் சிக்னல் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

4. அதிராம்பட்டினம் நிலையம் அருகே கடலுக்கு செல்லும் சாலை,  ஏரிப்புறக்கரை ரயில்வே சாலை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் ரயில்வே பாதை ஆகியவற்றில் கேட் கீப்பர் அறைகள் மற்றும் கேட் அமைக்கும் பணியின் கட்டுமானப்பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும், இதன் அருகே குடிநீருக்காக போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.

5. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான, நடைமேடை தடுப்பு சுவர், கழிப்பறை உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

6. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பிளாட் பார்ம்-1, பிளாட் பார்ம்-2 ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை பாதையில் கான்கிரீட் தளம் அமைக்கும் நடைபெற உள்ளது.

7. அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பாதையில் கூட்ஸ் ரயில், லாரி மூலம் ஜல்லிகள் நிரப்பட்டு வருகின்றன.

8. வாகன நெருக்கடியை தவிர்க்க, ரயில் நிலையத்தின் மற்றொரு பிரதான நுழைவுப் பாதையாக ஈஸ்ட் கோஸ்ட் சாலை கல்லூரி முக்கம் வழியாக கடற்கரைச் செல்லும் பள்ளிக்கூட சாலையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

9. அதிரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி  நிர்வாக பொறியாளர், பூபதி ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.

10. பிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணிகளை தினமும் ரயில் பயணிகள், பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி, இந்த வழித்தடத்தில் சென்னை செல்ல அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் விருப்பமாக இருந்து வருகிறது.

அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
ஏ.சாகுல் ஹமீது
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.