.

Pages

Sunday, November 4, 2018

'விபத்தில்லா தீபாவளி' விழிப்புணர்வு பிரச்சாரம் (படங்கள்)

தஞ்சாவூர் நவ.04-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயில் அருகில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். புதிய பேருந்து நிலையம், மெயின்ரோடு, பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, ஆவணம் சாலை, ரயிலடி உள்ளிட்ட முக்கிய இடங்களில் துண்டுப் பிரசுரம் வழங்கியும், ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் எல்ஐசி தலைமை ஆலோசகர் கே.நீலகண்டன், துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் கமலநாதன், கிள்ளிவளவன், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும். குடிசைப் பகுதிகளில் ராக்கெட் வெடிகளை வெடிக்கக் கூடாது. பட்டாசு, மத்தாப்பு, வெடிகள் வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணியக்கூடாது. பருத்தியிலான ஆடைகளையே அணிய வேண்டும். திறந்த வெளியிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
எதிர்பாராதவிதமாக யார் மீதேனும் தீப்பற்றினால் அதிகம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க வேண்டும். எதிர்பாரா விபத்துக்கள் ஏற்பட்டால் தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.