.

Pages

Thursday, November 8, 2018

ஒரு மில்லியன் உய்குர் முஸ்லீம்களை அடைத்து வைத்திருக்கும் சீனாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் குரல்!

அதிரை நியூஸ்: நவ.08
ஒரு மில்லியன் உய்குர் முஸ்லீம்களை அடைத்து வைத்திருக்கும் சீனாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் குரல்

மறுகல்வி என்ற பெயரில் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இன முஸ்லீம்களில் சுமார் 1 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக சீன அரசு முகாம்களில் தடுத்து வைத்துள்ளதுடன் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து அவர்களை இஸ்லாத்தையும், உய்குர் இன கலாச்சாரத்தையும் மறக்கச் செய்து சீன கம்யூனிஸ்டுகளாக (மதம்) மாற்றி வளர்த்தல், இளைஞர்களை தனியாக அடைத்து அவர்களுக்கு கட்டாய கம்யூனிச பாடங்களை கற்பிப்பதுடன் இஸ்லாத்தை பற்றி தவறாக பாடம் நடத்துதல், பெரியவர்களை தனியாக அடைத்து இவர்களிடமிருந்து சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் இஸ்லாமும் உய்குர் இன கலாச்சாரமும் பரவாமல் தடுத்தல் என இனஅழிப்பு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது சீன கம்யூனிச கொடுங்கோல் அரசு.

இத்தகைய அக்கிரமங்களை எதிர்த்தும், உடனடியாக தடுப்பு முகாம்களை மூடக்கோரியும் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா அலுவலகத்தில் நடைபெற்ற மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மேற்கத்திய நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்றவை சீனாவுக்கு எதிராக கடும் குரல் எழுப்பின. மேலும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் உய்குர் முஸ்லீம்கள் மனித உரிமைகளுக்குப் புறம்பாக அடைக்கப்பட்டுள்ளது குறித்து சீன அரசுடன் பேசுவேன் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மனித உரிமை கவுன்சிலின் கூட்டம் நடைபெற்ற போது ஐ.நாவின் ஜெனீவா அலுவலகத்திற்கு வெளியே திபேத், உய்குர் மக்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேண்டுதல்: 
தயவுசெய்து இதை ஒரு செய்தியாக படித்துவிட்டு கடந்து சென்றுவிடாமல் சீனாவில் இனஅழிப்பு நடவடிக்கையில் சிக்கியுள்ள சீனாவின் உய்குர் மற்றும் இதர இன சீன முஸ்லீம்கள்,, திபேத்திய பவுத்த மக்கள் அனைவரின் விடுதலை மற்றும் மறுவாழ்விற்காக ஏகன் அல்லாஹ்வின் பிரார்த்திக்க மறவாதீர் சகோதர, சகோதரிகளே.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.