.

Pages

Saturday, November 10, 2018

உலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது அமீரகம்!

அதிரை நியூஸ்: நவ.10
அமீரகம் மிகக் குறுகிய காலத்தில் உலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் உள்ள நாடுகளின் பட்டியலில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியது

திரும்பத் திரும்ப ஒரே செய்தியை குறுகிய இடைவெளியில் அடிக்கடி படிக்கும் போது உங்களுக்கு ஏற்படும் மனநிலை தான் எழுதுபவர்களுக்கும் இருக்குமென்றாலும் சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்துவதை விரும்பாதவர்களும் இருக்கத்தானே செய்வார்கள் என்ற பீடிகையுடன்...

அமீரக பாஸ்போர்ட் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் தேதி தான் உலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் உடைய நாடுகளின் பட்டியலில் 10வது இடத்திற்குள் முதன்முதலாக நுழைந்தது. செப்டம்பர் 23 ஆம் தேதியில் 9லது இடத்திற்கு முன்னேறிய பின் அதன் மதிப்பு புலிப்பாயச்சலில் சென்று கொண்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்குள் உலகின் மதிப்புவாய்ந்த பாஸ்போர்ட் உடைய நாடுகளின் பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு வர வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது மிக குறுகிய காலத்திலேயே அதையும் தாண்டி முன்னேறியுள்ளது. இந்த சாதனையின் மூலம் அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்போர் 163 உலக நாடுகளுக்கு விசா இன்றி அல்லது ஆன் அரைவல் விசா மூலம் எளிதாக பிரவேசிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

164 நாடுகளுக்கு அனுமதி என்பது 2 ஆம் இடத்திலும், 165 நாடுகளுக்கு அனுமதி என்பது முதலாம் இடத்திலும் உள்ளது. இந்த சாதனைகளும் விரைவில் எட்டப்படும் எனத் தெரிகிறது என்றாலும் ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாது என உள்மனது எச்சரிப்பதும் கேட்கிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.