அதிரை நியூஸ்: நவ.04
96 என்றால் நமக்கு வேற நெனப்பு வரும் ஆனா கேரளத்துல ஒரு பாட்டி 43,330 பேரில் முதலாவதாக வந்ததுள்ளது தான் நினைவுக்கு வரும்.
கேரளாவில் கடந்த குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் நாள் 'அக்ஷரலக்ஷம்' (Aksharalaksham - in Malayalam for “literacy for the masses”) எனும் பெயரில் கல்வி இயக்கம் ஒன்றை கேரளாவில் 100% படிப்பறிவு உள்ள மக்களாக உயர்த்தும் நோக்குடன் குறிப்பாக சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நாடோடி சமூக மனிதர்கள், மீனவ குடிகள் மற்றும் ஏழைகள் போன்ற அடித்தட்டு மக்களை குறிவைத்து துவக்கப்பட்டது.
இந்த அக்ஷரலக்ஷம் திட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 43,330 பேர் அடிப்படை கல்வி கற்கத் துவங்கினர். இதில் ஒரு மாணவியாக இணைந்து பயின்றவர் தான் 96 வயது மூதாட்டி கார்த்தியாயினி அம்மா. 4 ஆம் வகுப்புக்கு இணையான பாடத்திட்டமுடைய இந்த படிப்பின் இறுதியில் நடைபெற்ற தேர்வில் மாநில அளவில் 100க்கு 98 மார்க் எடுத்து தேர்வாகியுள்ளார் கார்த்தியாயினி அம்மா.
தான் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு வரை பயிலப் போவதாகவும், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்க ஆசைப்படுவதாகவும் கூறும் இந்த அம்மாவிடம் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு பிறகு என்னவாக ஆசைப்படுகின்றீர்கள் என கேட்டதற்கு அரசாங்க வேலை பார்க்க விரும்புவதாக கூறினார். இவரை கேரள முதலதைச்சர் நேரில் வரவழைத்து பாராட்டியதுடன் சான்றிதழ்களையும் வழங்கினார். கேரளா எழுத்தறிவு இயக்கத்தின் அக்ஷரலக்ஷம் கல்வித் திட்டத்தின் கீழ் எழுத, படிக்க, கணக்கிட அடிப்படை கல்விகள் கற்றுத்தரப்படுகின்றன.
ஒரு மாநிலத்தின் மக்களில் 90% மக்களாவது எழுத்தறிவு பெற்றிருந்தால் அந்த மாநிலங்களை முழுமையான கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட மாநிலமாக ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் (unesco) அறிவிக்கும். இதனடிப்படையில் 1991 ஆம் ஆண்டே கேரளா இந்த அந்தஸ்தை அடைந்து விட்டது என்றாலும் முழுமையாகவே 100% மக்களை எழுத்தறிவு கொண்டவர்களாக மாற்றுவதையே லட்சியமாக கொண்டு செயல்படுகின்றது கேரள அரசின் கேரள கல்வியறிவு இயக்கம். (Kerala Literacy Mission)
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.