.

Pages

Monday, November 12, 2018

தஞ்சை மாவட்டத்தில் ஆங்கில உச்சரிப்பிலுள்ள ஊர் பெயர்களை தமிழில் மாற்ற முடிவு!

தஞ்சாவூர் மாவட்டம், ஆங்கில வடிவில் உள்ள ஊர்களின்  பெயர்களை தமிழ் வடிவில் மாற்றம் செய்ய பொது மக்கள் கருத்துக்கள் தெரிவிக்கலாம்  என  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாட்டில் ஆங்கில உச்சரிப்பு மற்றும் எழுத்து வடிவம் கொண்ட ஊர் பெயர்களை தமிழ்  வடிவிலேயே மாற்றம் செய்திடும் வகையில் தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்களின்  சட்ட பேரவை அறிவிப்பை செயல்படுத்திடும் வண்ணம் தமிழக அரசால் உயர்நிலை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் உயர்நிலை குழு கூடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், வருவாய் கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளின் ஆங்கில பெயர்களை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் தங்கள் ஊர் பெயர்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் எழுத்து வடிவத்தில் இருக்கும் பட்சத்தில் அதனை தமிழ் உச்சரிப்பு மற்றும் எழுத்து வடிவமாக மாற்றி அமைத்திட தங்களின் ஆலோசனை மனுக்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சலிலோ அல்லது adtamildevelopment@gmail.com என்ற இணையதள முகவரியிலோ 15.11.2018க்குள் அளித்திடலாம். பெறப்படும் மனுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான உயர்நிலைக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்திட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.