.

Pages

Monday, November 12, 2018

800 ஆண்டுகளாக பழமையான தொழிற்நுட்பத்தில் பேப்பர் தயாரிக்கும் சீன கிராமம்!

அதிரை நியூஸ்: நவ.12
முதன் முதலாக பேப்பர் தயாரிப்பை கண்டுபிடித்து அறிமுகம் செய்தவர் சாய் லூன் (Cai lun) என்ற சீனர் ஆவார், இவர் ஒரு மூன்றாம் பாலினத்தவர் என வரலாற்றின் வழியாக அறியப்படுகின்றது. இவர் கி.பி 48 முதல் 121 வரை ஹான் (Han Dynasty) வம்ச சீனப்பேரரசர் ஹீ (He) காலத்தில் அவரது அரசவையில் வாழ்ந்தவர் என கூறப்படுகின்றது. நிற்க,

கடந்த 800 ஆண்டுகளாக இன்னும் பழைய தொழிற்நுட்பத்திலேயே பேப்பர் தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றது 'மன்ஸோ' (Manzhao) எனும் யுன்னான் மாகாணத்திலுள்ள சீன கிராமம் ஒன்று. இந்த கிராமத்தை சுற்றி அழகிய வெப்ப மண்டல மழைக்காடுகள் (Tropical rain forest) சூழந்துள்ளன. இந்த காடுகளிலிருந்த தான் இந்த கிராமத்தினர் தயாரிக்கும் 'டேய் பேப்பருக்கான (Dai paper) மூலப்பொருளான மரக்கூழ் கிடைக்கின்றது.

இந்த பேப்பர் தயாரிப்புக்கு முன் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பனை ஓலைச்சுவடிகளிலேயே பௌத்த மதம் குறித்த செய்திகள் பதியப்பட்டு வந்துள்ளன (Dai paper gradually replaced the Indian palm-leaf manuscripts). இந்த பனை ஓலைச்சுவடிகளுக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதே இந்த 'டேய்' பேப்பர் தொழிற்நுட்பம், கி.பி 1127 முதல் 1279 ஆண்டு வரை சோங் பேரரசு (Song Dynasty) ஆட்சியிலிருந்த காலத்தில் அன்றைய மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கிராம மக்கள் தயாரிக்கத் துவங்கியது இன்னும் பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருகின்றது.

காலப்போக்கில் இந்த டேய் பேப்பர் தயாரிப்பு நசிய ஆரம்பித்தவுடன் இந்த பழமையை காப்பாற்றுவதற்காகவும் இதையே நம்பியுள்ள கிராமத்தினரின் வாழ்வாதாரத்திற்காகவும் இந்த கிராமத்தின் டேய் பேப்பர் கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய தலைவர் பழைய பேப்பர் தொழிற்நுட்பத்திலேயே 11 வகையான பேப்பர் தயாரிப்புக்களையும், அந்தப் பேப்பரை கொண்டு செய்யப்பட்ட தேநீர் குவளைகள், தேயிலை பாக்கெட்டுகள், பேப்பர் குடைகள், தொப்பிகள், அரிக்கேன் விளக்கு கூடுகள், தற்காலிக வீட்டுக்கூரைகள் போன்ற பல வகையான பொருட்களையும் செய்து சந்தைப்படுத்தினார். இந்த கிராமத்தினர் டேய் பேப்பர் தொழிற்நுட்பத்தை கொண்டு செய்யும் பொருட்கள் தற்போது அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து, தென் கொரியா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

Source: CGTN
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.