![]() |
இல்ஹாம் உமர் |
அமெரிக்கா இடைக்கால நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக 2 முஸ்லீம் பெண்கள் வெற்றி
அமெரிக்கா என பொதுவாக அழைக்கப்படும் யுனைடெட் ஸ்டேட்ஸில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ) Mid Term Elections) 2 முஸ்லீம் பெண்கள் முதன் முதலாக வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் இனவாத வெறுப்பரசியல் எனும் நெருப்பாற்றை நீந்தி இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் ஒருவர் ஹிஜாபுடன் அமெரிக்கா காங்கிரஸ் என அழைக்கப்படும் பாராளுமன்றத்திற்குள் செல்கிறார் என்பது கூடுதல் முக்கியத்துவம் நிறைந்தது.
நேற்று இரவு துவங்கி இன்னும் நடைபெற்று வரும் அமெரிக்க செனட் சபை மற்றும் காங்கிரஸ் சபை (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) இடைத்தேர்தல்களின் முடிவுகள் இன்னொருபுறம் வெளியாகிக் கொண்டுள்ளதில் பல பெண்கள் அரிய சாதனைகளை நிகழ்த்திக் கொண்டுள்ள செய்திகளும் வெளிவந்து கொண்டுள்ளன.
ஹிஜாப் அணிந்த இல்ஹான் உமர் என்கிற சோமாலிய அமெரிக்க முஸ்லீம் மின்னெசோட்டா தொகுதியில் 255,630 வாக்குகள் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து நின்ற ஜெனீபர் ஜீலன்ஸ்கி என்பவர் பெற்ற வாக்குகள் 69,809 மட்டுமே. அதேபோல் பாலஸ்தீனிய அமெரிக்கரும் வழக்கறிஞருமான ராஷிதா திலேப் என்கிற முஸ்லீம் பெண்ணும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1776 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று தற்போது 242 ஆண்டுகளை கடந்துவிட்ட அமெரிக்காவில் எத்தனையோ தேர்தல்கள் நடைபெற்றுள்ளன என்றாலும் தற்போது தான் அமெரிக்க மண்ணின் பூர்வீக குடியை சேர்ந்த ஒரு (செவ்விந்திய) பெண் அமெரிக்க காங்கிரஸிற்கு தேர்வு பெற்றுள்ளார். அமெரிக்கா எனும் ஒரு நாடே செவ்விந்தியர்களின் ரத்தத்தின் மீது தான் கட்டப்பட்டது என்பது வரலாற்று வேதனை.
29 வயது நிரம்பிய அலெக்ஸாண்டிரியா ஓக்காஸியோ கோர்டஸ் என்ற பெண்ணும் மிக இளம் வயதில் முதன்முதலாக அமெரிக்க காங்கிரஸிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதேபோல் ஆப்பிரிக்க அமெரிக்கரான அயன்னா பிரஸ்லி என்பவரும் மஸ்ஸாசூட்ஸ் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
![]() |
ஷாரிஷ் டேவிட்ஸ் |
![]() |
ராஷிதா திலேப் |
![]() |
அயன்னா பிரஸ்லீ |
![]() |
அலெக்ஸான்டிரியா ஒக்காஸியோ கோர்டஸ் |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.