தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு மேலத்தெரு பகுதியில், சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில், கடந்த 2008-2009 ஆம் ஆண்டு, நபார்டு நிதி உதவி ரூ. 6 லட்சம் திட்ட மதிப்பீட்டில், மகளிர் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. மேலும், கடந்த 2014-15 ம் ஆண்டில், பேரூராட்சி பொதுநிதி ரூ.2.90 லட்சம் மதிப்பீட்டில், வளாகம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.
சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 9 ஆண்டுகள் கடந்த நிலையில், மகளிர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால், கழிப்பறை இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் அப்பகுதியினர் உள்ளனர். எனவே, சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருப்பில்லா நிருவாகம். அரசு பணம் அது மக்கள் பணம். தன்வீட்டில் இப்படிக் கட்டிவிட்டு திறக்காமல் இருப்பார்களா. யாருக்கான வசதியோ அவர்கள் போரடவில்லை யென்பதால் திறக்கவில்லையோ !
ReplyDeleteபொருப்பில்லா நிருவாகம். அரசு பணம் அது மக்கள் பணம். தன்வீட்டில் இப்படிக் கட்டிவிட்டு திறக்காமல் இருப்பார்களா. யாருக்கான வசதியோ அவர்கள் போரடவில்லை யென்பதால் திறக்கவில்லையோ !
ReplyDelete