அதிரை நியூஸ்: நவ.07
மேற்கு ஆஸ்திரேலியாவின் நியூமேன் (Newman) எனுமிடத்திலுள்ள இரும்புத்தாது சுரங்கத்திலிருந்து தாதுக்களை ஏற்றிக் கொண்டு ஹெட்லேண்ட் (Port Hedland) எனும் துறைமுகத்திற்கு திங்கள் அதிகாலை 4.40 மணியளவில் புறப்படவிருந்த சரக்கு ரயில் ஒன்று டிரைவர் இல்லாமமேயே தரிகெட்டு ஓடத்துவங்கியது. இந்த ரயில் உட்பட 4 ரயில்கள் கனிமங்களை வெட்டியெடுக்கும் (Mining giant) BHP எனப்படும் சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமாகவுள்ளன.
சுமார் 2 கி.மீ நீளமுடைய இந்த ரயில் 268 பெட்டிகளுடன் மணிக்கு 110 கி.மீ (68 மைல்) வேகத்தில் சுமார் 50 நிமிடங்கள் தன்னிச்சையாக ஓடியதால் துறைமுக நகரான ஹெட்லேண்டை அடையுமுன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளரவமற்ற பில்பாரா (Pilbara) எனுமிடத்தில் நிறுத்தும் நோக்கில் 92வது கி.மீ தூரத்தில் 'வேண்டுமென்றே தடம் புரளச்செய்யப்பட்டது' (Deliberately derailed) . இந்த செயற்கை விபத்தால் சுமார் 1,600 மீட்டர் ரயில்வே டிரேக் பலத்த சேதமடைந்துள்ளன. இவற்றை சரிசெய்து மீண்டும் இப்பாதையில் ரயல் போக்குவரத்தை துவங்க 1 வார காலம் ஆகுமாம்.
இந்த ரயிலின் டிரைவர் ரயில் புறப்படுமுன் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என பரிசோதித்து விட்டுப் புறப்படுவதே வழக்கம், அதே அடிப்படையில் ரயில் பெட்டிகளின் இணைப்பை உறுதி செய்தி கொள்ள இறங்கிய நேரத்திலேயே ரயில் தானாக ஓடத்துவங்கியுள்ளது. இந்த ரயிலில் யாருமே இல்லாததால் எத்தகைய மனித சேதாரங்களும் நிகழவில்லை. விபத்து குறித்து உயர்மட்ட விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளன.
Sources: Gulf News / The Guardian etc...
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.