அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம். காசிம் மைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் எஸ்.எம்.ஏ இபுராஹிம் அவர்களின் மருமகனும், அல்ஹாஜ் கே. அகமது மன்சூர், அல்ஹாஜ் கே. ராஜிக் அகமது ஆகியோரின் சகோதரரும், ஹாஜி என் ஹாஜா சரீப், ஹாஜி எம்.எஸ் முகமது மீராசாஹிப் ஆகியோரின் மாமனாரும் ஹாஜி ஆர். காசிம் சரீப் அவர்களின் தகப்பனாருமாகிய அல்ஹாஜ் கே. ரியாஸ் அகமது அவர்கள் புதன்கிழமை இரவு புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (29-11-2018) வியாழக்கிழமை மாலை அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
*اللهم مغفرله وارحمه*
ReplyDeleteயா அல்லாஹ் யா ரஹ்மானே
அன்னார் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து அருள்வாயாக.
குற்றங்களை பொறுத்தருள்வாயாக.
கபுரின் வேதனைகளிலிருந்து காப்பாற்று வாயாக.
அன்னார் அவர்களின் கபுரை ஒளி பொருந்திய விசாலாமான கபுராக்கி தருவாயாக.
அன்னார் அவர்களுக்கு உனது ஹபீப் எங்கள் நாயகம் ரஸூலுல்லாஹி சல் அல்லாஹு அலைஹி வ சல்லம் இருக்ககூடிய "ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்" எனும் சொர்க்கத்தை அருள்வாயாக.
மேலும் அன்னார் அவர்களின் இழப்பை தாங்கிக்கொள்ள கூடிய சக்தியையும் சபூர் என்னும் பொறுமையையும் அன்னார் அவர்களின் குடுத்தினருக்கு அருள்வாயாக.
ஆமீன்... ஆமீன்...
யாரப்பல் ஆலமீன்...
+
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete