தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் மறைந்த M.M.S பஷீர் அகமது புதல்வர் பொறியாளர் தமீம் அன்சாரி மணமகனுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மேலத்தெரு M.M.S வாடி வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.
விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராமலிங்கம், சண்முகம், ஞானசேகரன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார், பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், தமாகா தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளருமாகிய என்.ஆர் ரெங்கராஜன், டிஎஸ்பி கணேஷமூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் M.M.S குடும்பத்தார் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
மணமக்கள் வாழ்க வளத்துடன் பல்லாண்டு
ReplyDelete