.

Pages

Thursday, November 15, 2018

துபையில் ஒரு நாள் (ஞாயிறு) மட்டும் இலவச பார்க்கிங் மற்றும் இதர போக்குவரத்து சேவை பற்றிய அறிவிப்பு!

அதிரை நியூஸ்: நவ.15
துபையில் ஞாயிற்றுகிழமை மட்டும் இலவச பார்க்கிங் மற்றும் இதர போக்குவரத்து சேவை பற்றிய அறிவிப்பு.

துபையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மிலாதுந்நபி பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து துபை போக்குவரத்துத் துறை (RTA) வாடிக்கையாளர்கள் மையங்கள், கட்டண பார்க்கிங், பஸ், மெட்ரோ, டிராம், நீர்வழி போக்குவரத்துக்கள் நிலையங்கள் திறப்பு குறித்து அறிவித்துள்ளது.

கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் (customer happiness Center) எனப்படும் வாடிக்கையாளர் மையங்கள்:
உம்மு ரமூல் (Umm Ramool) மற்றும் RTA தலைமையகம் ஆகியன வழமைபோல் ஞாயிறன்றும் இயங்கும் இவ்விரு இடங்கள் தவிர்த்த பிற கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்களும் ஞாயிறு அன்று அடைக்கப்பட்டிருக்கும், திங்கட்கிழமை வழமைபோல் பணிகள் நடைபெறும்.

கட்டண பார்க்கிங் ஸ்லாட்டுகள்:
ஞாயிறு அன்று கட்டண பார்க்கிங் இலவசமே என்றாலும் அடுக்குமாடி பார்க்கிங்குகளில் வழமைபோல் ஞாயிறு அன்றும் கட்டணம் வசூலிக்கப்படும். திங்கட்கிழமை காலை முதல் மீண்டும் பார்க்கிங் கட்டண சேவை தொடரும்.

மெட்ரோ – ரெட் லைன்:
காலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை செயல்படும்.

மெட்ரோ – கிரீன் லைன்:
காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை செயல்படும்.

துபை டிராம்:
காலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாளின் துவக்கம்) செயல்படும்.

பஸ் சேவைகள்:
கோல்டு சூக் பஸ் நிலையம்- அதிகாலை 4.25 மணிமுதல் நள்ளிரவு 12.29 மணிவரையும்,

அல் குபைபா பஸ் நிலையம் (பர்துபை) – அதிகாலை 4.14 முதல் நள்ளிரவு 12.33 மணிவரையும்,

சத்வா பஸ் நிலையம் - தடம் எண் C01 மட்டும் 24 மணிநேரமும் செயல்படும் மற்றவை அதிகாலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரையும்,
அல் கிஸஸ் பஸ் நிலையம் - அதிகாலை 5.00 மணிமுதல் முதல் இரவு 11.45 மணிவரையும்,

அல் கோஸ் இன்டஸ்ட்ரியல் பஸ் நிலையம் - அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.35 மணிவரையும்,

ஜெபல் அலி பஸ் நிலையம் - அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

மெட்ரோ இணைப்பு (Metro Feeder Buses) பஸ் நிலையங்களான அல் ராஷிதியா, மால் ஆப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, புரூஜ் கலீபா, அபுஹாயில் மற்றும் எதிஸலாத் ஆகியவை அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12.20 மணிவரையும் செயல்படும்.

இன்டர்சிட்டி பஸ் சேவைகள்:
அல் குபைபா (பர்துபை) - ஷார்ஜா இடையே 24 மணிநேரமும்,
அல் குபைபா (பர்துபை) – அபுதாபி இடையே அதிகாலை 4.36 மணிமுதல் நள்ளிரவு 12.01 மணிவரையும்,

யூனியன் ஸ்கொயர் - அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 1.25 மணிவரையும்,

அல் சப்கா நிலையம் - அதிகாலை 6.15 மணிமுதல் நள்ளிரவு 1.30 மணிவரையும்,

டெய்ரா சிட்டி சென்டர் நிலையம் - அதிகாலை 5.35 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

கராமா நிலையம் - அதிகாலை 6.10 மணிமுதல் இரவு 10.10 மணிவரையும்,
அல் அஹ்லீ கிளப் நிலையம் - அதிகாலை 5.55 மணிமுதல் இரவு 10.15 மணிவரையும் செயல்படும்.

துபைக்கு வெளியிலுள்ள RTA பஸ் நிலையங்கள்:
ஷார்ஜா – அல் தாவூன் நிலையங்கள் to துபை - அதிகாலை 5.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரையும்,

அஜ்மான் to துபை - அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

ஃபுஜைரா to துபை – அதிகாலை 5.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையும்,

ஹத்தா to துபை – அதிகாலை 6.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரையும் செயல்படும்.

நீர்வழி போக்குவரத்துக்கள்:
வாட்டர் பஸ் - மரீனா மால், மரீனா வாக், மரீனா டெர்ரேஸ் மற்றும் மரீனா புரோமினேட் ஆகிய படகு நிலையங்களிலிருந்து பகல் 12 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும்,

வாட்டர் டேக்ஸிக்கள் - காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரையும் செயல்படும்.

துபை பெர்ரி (Dubai Ferry):
அல் குபைபா மற்றும் துபை மரீனா படகு நிலையங்களிலிருந்து காலை 11 மணி, பகல் 1 மணி, மாலை 3 மணி, மாலை 5 மணி மற்றும் மாலை 6.30 மணி என இருபுறமும் தலா 5 சேவைகளை வழங்கும்.

அல் ஜத்தாஃப் (Al Jaddaf) முதல் துபை வாட்டர் கேனால் (Dubai Water Canal) வரை பகல் 12 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் 2 சேவைகள் நடைபெறும் மறுபுறம் துபை வாட்டர் கேனாலிலிருந்து அல் ஜத்தாஃபிற்கும் பகல் 2.05 மணிக்கும் மாலை 7.35 மணிக்கும் என 2 சேவைகள் நடைபெறும்.

ஷேக் ஜாயித் ரோடு படகு நிலையத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் அதே இடத்திற்கே வரும் சுற்று சேவைகள் (Round Trip Services)  மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.

Traditional Abra எனப்படும் பாரம்பரிய படகுகளின் போக்குவரத்து துபை கிரீக் படகு நிலையங்களான பனியாஸ், துபை ஓல்டு சூக் மற்றும் அல் சீஃப் நிலையங்களிலிருந்து காலை 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை நடைபெறும். ஷேக் ஜாயித் ரோடு படகு நிலையத்திலிருந்து மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை அப்ரா சேவை நடைபெறும்.

மின்சக்தி படகு சேவைகள் (Electric Abras):
புரூஜ் கலீபா – மாலை 6 முதல் இரவு 11 மணிவரையும்
,
அல் மம்ஸர் - பகல் 2 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும்,

அல் கஸ்ர் ஹோட்டல் படகு நிலையம் முதல் துபை மால் படகு சேவை நிலையம் வரையில் பகல் 12 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

புரூஜ் பிளாஸா படகு சுற்றுச் சேவைகள் பகல் 12 மணிமுதல் இரவு 11.30 மணிவரை நடைபெறும்.

ஏர் கன்டிஷன்டு அப்ராக்கள்: 
அல் ஜத்தாஃப் மற்றும் துபை பெஸ்டிவல் சிட்டி ஆகியவற்றிலிருந்து காலை 7 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரையும் இயங்கும் என துபை போக்குவரத்து துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: RTA Website
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.