.

Pages

Sunday, November 4, 2018

பாடுபட்ட சேர்த்த பணம்... லாபமான முதலீடு ஆக மாற வேண்டுமா? குவைத்தில் இலவச கருத்தரங்கம்!

ஜெய்னுல் ஹுசைன்
அதிரை நியூஸ்: நவ.04
பணத்தை சிறப்பான முதலீடாகவும், சேமிப்பாகவும் மாற்றும் வழிமுறை குறித்து இலவச கருத்தரங்கம் (free Seminar) நிகழ்ச்சி எதிர்வரும் ஜன.1 ந் தேதி (விடுமுறை தினத்தில்)  குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், குவைத் வாழ் அதிரையர்கள் கலந்துகொண்டு பயனடைய அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிரை பைத்துல்மால் குவைத் கிளைத் தலைவர் ஜெய்னுல் ஹுசைன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
சம்பாதித்த பணத்தை எந்த திட்டத்தில் முதலீடு செய்வது? இந்த கேள்வி சற்று மலைக்கத்தான் வைக்கிறது. சந்தையில் இருக்கும் ஆயிரக்கணக்கான திட்டங்களில் எது சிறந்தது. எது லாபம் கொடுக்கும்.!

எளிமைதான் எத்தனை வசீகரமானது. முதலீட்டுத் திட்டங்கள் என்று வரும் போது வங்கிகளில் சென்று வாங்கும் வைப்பு நிதிகளைப் போல ஒரு எளிமையான சாதனம் எதுவும் இல்லை. இதுதான் சராசரி மக்களின் எண்ணமாக உள்ளது. இந்த எளிமையின் ஆதாரம் என்ன?

ஒரு முதலீட்டாளர் எந்த ஒரு சிக்கலான தேர்வும் செய்யத் தேவையில்லை. அட இந்த கத்தரிக்காய் கிலோ என்னங்க விலை என்பது போல, இத்தனை மாதங்களுக்கு எத்தனை வட்டி என்று விசாரித்து விட்டு, பணத்தைக் கொடுத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டு ஷேப்பாக வீட்டுக்குத் திரும்பலாம். அவ்வளவுதான் முதலீடு செய்தாகிவிட்டது என்ற நிம்மதி ஏற்படும். அந்த முதலீடு உங்களுக்கு எந்த வகையில் லாபமாக இருக்கிறது. இது தெரியாமல் பலரும் தவிக்கின்றனர்.

ரிஸ்க் சார்ந்த முதலீடுகளில் இந்த எளிமை இல்லைதான். ஆனால், அதற்கு ஈடாக லாப சாத்தியம் அதிகம். குறிப்பாக நீண்ட கால திட்டங்களில். இதனால்தான் அவற்றை பொருளாதார நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு சரி என்று முன் வருபவர்கள் நல்ல பலனை அடைகின்றனர்.

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு, சிறுதுளி பெருவெள்ளம் போன்ற சேமிப்பு பற்றிய சிந்தனைகள் அனைத்தும் பொருளாதார சீர்திருத்தங்களாலும், பணவீக்கத்தினாலும், உருமாறி விட்டன. தற்போதைய சூழலில் நேற்றைய சேமிப்பு - இன்றைய முதலீடு - நாளைய வருமானம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான காலகட்டத்தில் பாதுகாப்பான முதலீட்டின் மூலமாக நம்மால் பணம் சம்பாதிக்க முடியும்.

இதில் லாபகாரமான முதலீட்டைக் காட்டிலும், பாதுகாப்புடன கூடிய லாபகரமான முதலீடு மிகவும் அவசியம். அதிலும், குறுகிய கால முதலீடுகளா அல்லது நீண்ட கால முதலீடுகளா என்பதை முதலீடு செய்வதற்கு முன் யோசித்து முடிவெடுக்க வேண்டும். பாடுபட்டு சேர்த்த பணத்தை, அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற இடத்தில் முதலீடு செய்து பின்னர் நஷ்டம் ஏற்பட்டு புலம்புவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே உங்கள் உழைப்பால் வந்த பணத்தை சிறப்பான முதலீடாகவும், சேமிப்பாகவும் மாற்றும் வழிமுறையை இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 1 விடுமுறையில் அதிரை பைத்துல்மால் குவைத் கிளை ஒரு இலவச செமினார் (free Seminar) ஏற்பாடு செய்துள்ளது.

உங்கள் உழைப்பால் ஈட்டிய ஹலாலான சம்பாத்தியத்தை ஹலாலான மற்றும் லாபகரமான முதலீடு செய்து நல்ல வருமானம் தீட்டுவது எப்படி என்ற வகுப்பு பாமரர்களிலிருந்து படித்தவர்கள் வரை பயன்பெற ஒரு அருமையான வாய்ப்பு. இதை யாரும் நழுவ விடவேண்டாம்.  இது குவைத்தில் வசிக்கும் அதிரையர்களுக்கு மட்டுமே!

18 வருஷமா குவைத்தில் இருந்தேன் பாய்.  கை நிறைய சம்மதிச்சேன். பிள்ளைகளுக்கு கல்யாணத்த பண்ணி வச்சேன். ஒரு வீடு கட்டினேன். ஒரு மனைய வாங்கினேன். இதத்தவிர வேறெதுவும் செய்ய முடியல. பெத்த மவனும் பொண்டாட்டியோட போய்ட்டான்.

இப்ப வருமானத்துக்கு வழியில்லாம, மார்க்கெட்ல கறி வாங்க காசில்லாம பெருநாளுக்கு கூட பழய சட்டைய கழுவி அயன் பண்ணி போடவேண்டிய நெலம!```", இப்படி புலம்புபவர்களை நாம் பார்க்கிறோம். தன்  குடும்பம் நல்லா  இருக்கணும்  என்று தன் வாலிபத்தை தொலைத்து ஆரோக்யத்தை இழந்து வெளிநாடுகளில் உழைத்து, இறுதியில் வயதாகி நோயாளியாக ஊரில் வந்து செட்டிலாகும் பலருடைய நிலைமை இதுதான்.  அவர்கள் செய்த தவறுதான் என்ன?   அந்த தவறை நாம் செய்யாமல் புத்திசாலித்தனமாக சம்பாதிக்கும்போதே நல்ல வருமானம் வரக்கூடிய முதலீடுகளை உண்டாக்குவது எப்படி?

தெரிந்துகொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 1 ஆம் தேதி குவைத்தில் நடைபெற உள்ள கருத்தரங்க நிகழ்ச்சியில்... என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
00965 99781286 (வாட்ஸ் அப்) 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.