துபை அல் மம்ஸர் பீச் பார்க் பல்வேறு நவீன வசதிகளுக்குப் பின் ஸ்மார்ட் பார்க் ஆக மாற்றம்
துபை அல் மம்ஸர் பார்க் (Al Mamzar Beach Park) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் புத்தாக்க தொழிற்நுட்பங்களை (Innovative Technologies) பயன்படுத்தி பல்வேறு நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் பீச் பார்க்காக நவீனமயமடைந்துள்ளது.
ஏற்கனவே நோல் கார்டுகளை பயன்படுத்தி உள்நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அல் மம்ஸர் பார்க்கிற்கென பிரத்தியே ஆப் (Al Mamzar Park App) ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பார்பீக் கிரில் (BBQ) எனப்படும் கறிகளை சுட்டு தயாரிக்கப்படும் உணவுகளுக்காக 15 பிரத்தியேக பகுதிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மம்ஸர் ஆப் வழியாக விர்ச்சுவல் தொழிற்நுட்பம் (Virtual Technology) மூலம் முழுமையாக சுற்றிப்பாக்கலாம் மேலும் குழந்தைகளுக்கு மரம் செடி கொடி வளர்ப்பில் ஆர்வமூட்டுவதற்காக விர்ச்சுவல் காட்சிகளின் வழியாக விவசாய பாடமும் உள்ளது. இங்கே பூசப்பட்டுள்ள பெயிண்டுகள் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடுகளை உறிஞ்சி எடுக்கும் தன்மை கொண்டவை.
இங்குள்ள 5 கடற்கரை பகுதிகளுக்கும் சதஃப், நவ்ரஸ், பிளமிங்கோ, தானா மற்றும் முர்ஜான் எனப் பெயரிடப்பட்டள்ளதுடள் கூடுதலான குளியல் அறைகள், நிழற்குடைகள், உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு என கூடுதலான சிறப்பு கார் பார்க்கிங், அவர்கள் கடற்கரைக்கு செல்வதற்கான சிறப்புப் பாதைகள் என ஒதுக்கப்பட்டுள்ளன.
மம்ஸர் பார்க் போன்று துபையின் பிற பார்க்குகளும் விரைவில் நவீனமடைய உள்ள நிலையில், மக்களின் உடல்நலத்தை பேணிடும் வகையில் இங்கு அடிக்கடி பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் இருக்கைகள் (பெஞ்சுகள்) இலவச வைபை வசதியையும், இலவச மொபைல் சார்ஜிங் வசதியையும் வழங்கும். மொபைல் போன்களை சார்ஜ் செய்ய அந்த பெஞ்சின் மீது மொபைலை வைத்தாலே போதுமானாது தானே சார்ஜ் ஆகிவிடும், ஓயர்கள், யுஎஸ்பிக்கள், சார்ஜர்கள் என எதுவும் தேவையில்லை.
ஸ்மார்ட் கைப்பட்டியாகவும் கடிகாரமாகவும் (Smart Band) செயல்படும் இந்த கருவியில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு குழந்தைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அணிவிக்கப்படுவதால் அவர்கள் எந்நேரமும் கண்காணிப்பில் இருப்பர். அவசியமான நேரத்தில் கைப்பட்டி அணிந்தவர்களும் நம்மை அழைத்து பேச முடியும், இந்த கைப்பட்டி அணிந்தவர்களை தங்கள் ஸ்மார்ட் போனுடன் இணைத்து அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பூங்கா காவல் பொறுப்பாளர்களும் (Caretakers) அழைத்து பேச முடியும்.
ஸ்மார்ட் ஓயஸீஸ் என பூங்காவினுள் அமைக்கப்பட்டுள்ள 2 மையங்களில் (Smart Oasis Hub) காற்றில் கலந்துள்ள ஈரப்பதம் உறிஞ்சி எடுக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகின்றது. இதற்கான மின்சக்தி முழுக்க முழுக்க சூரியஒளி மின்தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் ஓயஸீஸில் தினமும் 90 லிட்டர் குடி தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகின்றதுடன் இது ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்யும் மையமாகவும், வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்கள் மீது மெல்லிய தண்ணீரை விசிறியடிக்கும் பணியையும் மேற்கொள்கின்றது.
இங்குள்ள குட்டி விமானங்களான டிரோன்கள் மூலம் தினமும் செடி கொடி மரங்கள் மேலிருந்தவாறு ஸ்கேன் செய்யப்பட்டு அவற்றை நோய் ஏதும் தாக்கியிருக்கின்றதா எனவும், அவை வெளியிடும் கரியமில வாயுவின் அளவும் வெப்ப வரைபடங்கள் மூலம் பகுப்பாய்வுகள் செய்யப்படுகின்றன.
பிக் பெல்லி (Big Belly) எனப் பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட் குப்பை தொட்டிகள் நிறைந்தவுடன் தானாகவே அதுகுறித்த தகவல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி துப்புரவாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதேபோல் ஸ்மார்ட் ரெஸ்க்யூ (Smart Rescue) என்ற திட்டத்தின் வழியாக குளிக்கும் போது கடலில் சிக்கி தத்தளிப்பவர்களை காப்பாற்ற இங்குள்ள குட்டி விமானங்களே சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்ணீரில் மிதக்கும் பாதுகாப்பு வளையங்களை (Lifebuoy Rings) கொண்டு சென்று கொடுத்து உதவும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
நல்ல ஒரு தகவல் இதனைப்பற்றி நான் அரிந்து உள்ளேன்
ReplyDelete