.

Pages

Monday, November 5, 2018

தஞ்சை மாவட்ட காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் பணிகள் குறித்து விளக்க கூட்டம்!

காவல் நிலையங்களில் காவலர்களை வரவேற்பாளர்களாக நியமிக்க காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டதன் பேரில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் தலைமையில் 02.11.2018 மற்றும் 03.11.2018 தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வசந்தம் திருமண மண்டபத்தில் காவல் நிலையத்தில் காவலர்களை வரவேற்பாளர்களாக நியமனம் செய்வது மற்றும் அவர்களது பணிகள் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பாலசந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையகம், தஞ்சாவூர், ரவிசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு,  ராஜேந்திரன். காவல் துணை காவல் கண்காணிப்பாளர் பணியிடை பயிற்சி மையம், தஞ்சாவூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்தில் பணி புரியும் வரவேற்பாளர் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு வரவேற்பாளர் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.