.

Pages

Monday, November 12, 2018

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.12
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 61 வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 09/11/2018 அன்று நேஷனல் மியூசியம் பத்ஹா பார்க்கில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : சாகீர் S/o மன்சூர் ( உறுப்பினர்  )
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை       :  N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை              : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை      : இமாம்கான் ( உறுப்பினர் )

தீர்மானங்கள்:
1) இன்ஷா அல்லாஹ் வரும் வருடம் 2019-க்கான  பென்ஷன் விஷயமாக உறுப்பினர்கள்  தன்னார்வமாக பெயர்களை பதிவு செய்து இறுதியில் இந்த பொருளாதார சூழ்நிலையிலும்  25 நபர்கள் முன் வந்து பெயர்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு மேலும் இறைவன் பரக்கத்து செய்து மேலும் நமதூர் ஏழைகளின் பொருளாதார உதவிகளை வளப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

2) ID விஷயமாக நினைவூட்டப்பட்டு விடுபட்ட நபர்கள் ID தலைமையக்கத்திலிருந்து பெற்று தருவதுடன் மேலும் தன் முகவரிகள் இதுவரை தராத நபர்களிடம் பெற்று அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

3) நமதூர் சிறிய தைக்காள் (புதுத்தெரு தென்புறம்) தெருவை சேர்ந்த சகோதரர் ரஹ்மானின் மனைவியின் மருத்துவ செலவிற்காக ஒரே நாளில் ரூ50,000/- ரியாத்திலிருந்து ABM தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மருத்துவ உதவிக்காக பணம்  தந்து உதவிய  பல நல்ல உள்ளங்களுக்கு நன்றி செலுத்தப்பட்டது. 

4) ABM தலைமையகம் மூலம் இன்ஷா அல்லாஹ் வரும் வருடம் முதல் ( பல்லாவரம் ) பில்டிங் விற்று பணம் வந்த பிறகு ரூ40,000/- நபர் ஒன்றுக்கு வட்டியில்லா நகைக்கடனாக இரட்டிப்பதாக அறிவித்திருப்பதற்கு பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.

5) ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பெற்றிக் கொண்டிருக்கும் நபர்களில் மிகவும் ஏழ்மையான 5 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் மூன்று நபர்களுக்கு தையல் மிஸினும், இரண்டு நபர்களுக்கு கிரைண்டர் வழங்கி (அவர்களின் கைத்தொழிலுக்கு உதவுவது) என முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மூலம் அதற்கான தொகையை தலைமையகத்திற்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

6) கடந்த வெள்ளியன்று நடந்து முடிந்த கூட்டத்திற்கு ( தொடர் மழையையும் பாராது ) வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகளுக்கும் நன்றி தெரிவிப்பதோடு இதுபோன்று பல தெருவாசிகளும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் பொருளாதார உதவிகளும் தந்து நல்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

7) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் DECEMBER 14-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும், மேலும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். அதில் அதிரை வாசிகள் அனைவர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
 
 
 
 
 

1 comment:

  1. பைத்துல் மால் வட்டி இல்லா நகைக்கடன் அதிரை வாசிகளுக்கு மட்டுமா அல்லது எந்த ஊரை சார்ந்தவராக இருந்தாலும் உண்டா..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.