அதிராம்பட்டினம், நவ.07
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மாணவ- மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குப்பையை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தும் முறையாக அகற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில், குப்பையை அகற்றக் கோரி மாணவ ~ மாணவிகள் நூதன போராட்டத்தில் இன்று புதன்கிழமை காலை ஈடுபட்டனர். அவர்கள் பள்ளி முன்பு ‘‘தடுப்போம் தடுப்போம் நோய் பரவுதை தடுப்போம்", கொட்டாதீர் கொட்டாதீர் குப்பைகளை கொட்டாதீர்" என்ற பதாகைகளுடன் நின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஹாஜா முகைதீன் கூறியது;
'கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவது கிடையாது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பள்ளி மாணவர்கள் கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள், அப்பகுதி சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை மீது அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.