இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
கோழி வளர்க்கும் தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு 2018-19ம் ஆண்டிற்கு ரூ.50 கோடி செலவில் கோழி அபிவிருத்தி திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 100 சதவிகித அரசு மானியத்தில் ஒரு பெண் பயனாளிக்கு 4 வார வயதுடைய 50 “அசில்” இன நாட்டுக்கோழிகள் (25 பெட்டைக்கோழிகள் மற்றும் 25 சேவல்கள்) வழங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 பெண் பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2800 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண் பயாளிகள் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தினால் வழங்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலிலும், நிரந்தரமாக சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவராகவும், ஏற்கனவே விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் திட்டத்தில் பயன் பெறாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 30 சதவிகித பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பிலிருந்து தேர்வு செய்யப்படுவர்.
மேற்காணும் தகுதிகள் மற்றும் விருப்பம் உள்ள மகளிர் விண்ணப்பதாரர்கள், தங்கள் பகுதியின் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் உரிய சான்றாவணங்களுடன் 30.11.2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கோழி அபிவிருத்தி திட்டம் குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களை நேரில் அணுகலாம். என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.