.

Pages

Thursday, November 15, 2018

அரசு பள்ளிக்கு தூய்மை விருது!

பேராவூரணி நவ.15-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தமிழக அரசின் தூய்மை பள்ளிக்கான மாவட்ட அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை வட்டார வளமையத்தில் புதன்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சின்னையன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் வீரம்மாள், சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர் ராமநாதன், மற்றும் பள்ளி மாணவி அருந்ததி ஆகியோரிடம், தூய்மை பள்ளிக்கான விருதினை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி வழங்கினார்.

அப்போது ஒரத்தநாடு கல்வி மாவட்ட அலுவலர் ந.காமராசு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ், மாவட்ட கட்டிடப் பணி ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் பட்டுக்கோட்டை பாக்கியராஜ், பேராவூரணி ரெ.பரமசிவம், ஆசிரியர் பயிற்றுனர் அ.முருகேசன். ஆகியோர் உடன் இருந்தனர்.

தூய்மைப்பள்ளி விருது பெற்ற பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் து.முருகேசன், சிவலிங்கம், முத்துவேல், அன்பழகன், டாக்டர் டி.நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.