.

Pages

Thursday, November 8, 2018

டெங்கு கொசு உற்பத்தியை கண்காணிக்க தவறிய தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், டெங்கு கொசு உற்பத்தியை கண்காணித்து தடுக்க  தவறிய தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (08.11.2018) ரூ.5000 அபராதம் விதித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திஜி சாலை பகுதியில் உள்ள குடும்ப நலம் துணை இயக்குநர் அலுவலகம், சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம், மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை  துணை இயக்குநர் அலுவலகம், சத்திரம் நிர்வாக அலுவலகம், ஹோட்டல் தமிழ்நாடு, புது மாநகராட்சி கட்டுமான இடம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து இன்று (08.11.2018) ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது, தஞ்சாவூர் மாநகராட்சி புது கட்டடம் கட்டப்படும் இடத்தில் கட்டடத்தின் மேல் தளத்தில் கான்கிரீட்  மீது விடப்பட்ட தண்ணீரில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கண்டறிந்தார். கான்கிரீட் தண்ணீரை மாற்றாத காரணத்திற்காகவும், டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை கண்காணித்து தடுக்க தவறியதற்காகவும், தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.5000 விதித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.  மேலும் சத்திரம் நிர்வாக வளாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட காரணத்திற்காக சத்திரம் நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  ரூ.500 அபராதம் விதித்தார்.

இவ்வாய்வின் போது தஞ்சாவூர்  வட்டாட்சியர் அருணகிரி, நகர் நல அலுவலர் நமச்சிவாயம்  ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.