.

Pages

Sunday, November 4, 2018

வெளிநாடுவாழ் இந்திய முஸ்லீம்களுக்கு ஹஜ் கோட்டாவில் உள்ஒதுக்கீடு வேண்டும் ~ கேரள ஹஜ் கமிட்டி தலைவர் கோரிக்கை!

அதிரை நியூஸ்: நவ.04
வெளிநாடுவாழ் இந்திய முஸ்லீம்களுக்கு ஹஜ் கோட்டாவில் உள்ஒதுக்கீடு வேண்டும் என கேரள ஹஜ் கமிட்டி தலைவர் கோரிக்கை

கேரளா மாநில ஹஜ் கமிட்டி தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹமது பைஸி அவர்கள் அமீரகத்திற்கு வருகை தந்துள்ளதுடன் அனைத்து எமிரேட்டுகளிலுமுள்ள கேரள முஸ்லீம்களை சந்தித்து ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் அவர்களுடைய முறைப்பாடுகளை கேட்டு வருகின்றார்.

உள்நாட்டு மக்களுக்கு ஹஜ் கோட்டாவில் முக்கியத்துவம் தர வேண்டியுள்ளதால் அமீரக ஹஜ் கோட்டாவை பயன்படுத்தி வெளிநாட்டினர் யாரும் ஹஜ் செய்ய முடியாத நிலை உள்ளது அதேவேளை இந்தியாவிற்கான கோட்டா ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுவாழ் இந்திய முஸ்லீம்களுக்காக (NRI Muslims) அதிலிருந்து தனி உள்ஒதுக்கீடு செய்ய இந்திய ஹஜ் கமிட்டியும் இந்திய அரசும் ஆவண செய்ய வேண்டும் என கோரப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஹஜ் விசா நடைமுறைகளுக்காக 3 மாதங்கள் வரை பாஸ்போர்ட்டுகளை தர வேண்டியுள்ளது தற்போது அது ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தாலும் அவற்றையும் நீக்கிவிட்டு டிஜிட்டல் ஒப்புதல்கள் வழியாகவே ஹஜ் விசா ஸ்டாம்பிங் நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி அரசு, இந்திய அரசு மற்றும் இந்திய அரசிற்கும் வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமீரகத்திலிருந்து ஹஜ் செய்பவர்களுக்கு சுமார் 15 முதல் 20 நாட்களே விடுமுறைகள் ஹஜ் யாத்திரைக்காக வழங்கப்படுகின்றது. இந்த குறுகிய காலத்தில் விசா நடைமுறைகளை முடித்துக் கொண்டு ஹஜ் செய்யச் செல்ல முடியவில்லை என்பதால் ஹஜ் விடுமுறையை அதிகரிக்க வேண்டும் என அமீரக அரசிற்கும் வேண்டுகோள் விடுத்தார்.

வரும் ஆண்டுகளில் கோழிக்கோடு மற்றும் கொச்சி விமான நிலையங்களிலிருந்தும் ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்லவும், மும்பையில் மட்டுமே அடிக்கப்படும் ஹஜ் விசா நடைமுறைகளை எதிர்வரும் ஆண்டுகளில் திருவனந்தபுரத்திலிருந்தும் துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசு மற்றும் அரசு நிறுவனங்களிடம் எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவித்தார்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.