அதிராம்பட்டினம், நடுத்தெரு 'துலுக்க பள்ளிவாசல்' நிர்வாகப் பொறுப்பிற்கு புதிதாக 7 டிரஸ்டிகள் தமிழ்நாடு வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட உள்ளனர்.
விண்ணப்பதாரர்களுக்குரிய தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய 'பொதுஅறிவிப்பு' தக்வா பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில் கடந்த செப்.28 ந் தேதி ஒட்டப்பட்டது. இதில், கடந்த அக்.12 ந் தேதிக்குள் தஞ்சாவூர் வக்ஃபு கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க அறிவுறுத்திருந்தனர்.
இதையடுத்து, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த எம்.ஏ முகமது ஹனீபா, எஸ்.கே.எம் அகமது அன்சாரி, ஏ.அயூப்கான். அ.அப்துல் ரஹ்மான், எம்.அகமது அஸ்லம், எம்.இசட். அப்துல் மாலிக், எஸ்.முகமது ஜமீல், ஏ. சாகுல் ஹமீது, எம்.எஸ் ஷிஹாபுதீன், எஸ்.ஜெ அப்துல் ஜலீல், எம்.சாகுல் ஹமீது, எம்.அகமது இப்ராஹீம், எம்.அபூபக்கர், எஸ்.அகமது ஹாஜா ஆகியோர் அடங்கிய 14 பேர் நிர்வாகக் குழு தேர்வுக்கு விண்ணப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், மனுதாரர்கள் குறித்து பரஸ்பரம் ஏதேனும் ஆட்சோபனை / கருத்துகள் இருப்பின் நாளை (நவ.08) வியாழக்கிழமை மாலை 5.45 மணிக்குள் தஞ்சாவூர் மாவட்ட வக்ஃபு கண்காணிப்பு அலுவலகத்திற்கு அனுப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.