.

Pages

Thursday, November 8, 2018

அமெரிக்கா புதிய எம்.பி இல்ஹாம் உமரின் நன்றி அறிவிப்பு!

அதிரை நியூஸ்: நவ.08
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் இல்ஹாம் உமரின் நன்றி அறிவிப்பு

அமெரிக்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற அமெரிக்கன் காங்கிரஸிற்குள் நுழையும் இல்ஹாம் உமர் என்ற சோமாலிய-அமெரிக்கா பெண் மிகவும் அற்புதமான முறையில் தனது தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசினார்.

ஜனநாயக கட்சியின் சார்பில் மின்னேசோட்டா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் தனது நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலில் பேசிய வார்த்தை 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்ற அழகிய முகமனாக இருந்தது பின்பு 'அல்ஹம்துலில்லாஹ்' என அல்லாஹ்விற்கு நன்றி கூறினார்.

தன்னுடைய இந்தத் தேர்வின் மூலம் பல்வேறு முதன்மைச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தனது நன்றியுரையில் பட்டியலிட்டார். அவைகளாவன, மின்னேசோட்டா மாநிலத்தின் சார்பாக அமெரிக்கா காங்கிரஸிற்கு செல்லும் முதலாவது கருப்பினப் பெண், முதலாவது ஹிஜாப் அணிந்த பெண், முதலாவது அகதி பெண் மற்றும் முதலாவது முஸ்லீம் பெண் என்பன போன்றவை.

சோமாலியாவில் உள்நாட்டு கலகம் உச்சத்தில் இருந்த போது 8 வயது சிறுமியான இவர் தன்னுடைய பெற்றோர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி கென்யாவிலுள்ள ஒரு அகதிகள் முகாமில் 4 ஆண்டுகள் கஷ்டப்பட்டவர். பின்பு அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்று இன்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு மின்னேசோட்டா மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு இவருக்கு உண்டு.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.