அதிரை நியூஸ்: நவ.06
அமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கான மீலாதுந்நபி விடுமுறை நாள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் எதிர்வரும் நவ.20 ஆம் தேதி மீலாதுந்நபி எனும் நாளாக அனுசரிக்கப்படவிருந்தது அரசுத்துறை ஊழியர்களின் வசதிக்காக வாராந்திர விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனியுடன் சேர்த்து தொடர்ச்சியாக விடுமுறையை அனுபவித்திட ஏதுவாக முன்கூட்டியே நவ. 18 ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமீரக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் வெள்ளி, சனி வாராந்திர விடுமுறை நாட்களை உடைய தனியார்
துறையினருக்கும் மேற்காணும் அடிப்படையிலேயே 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சனிக்கிழமையன்று வாராந்திர விடுமுறையின்றி வேலைக்கு சென்றுவருவோர் மட்டும் வழமைபோல் இடையில் நவ.17 தேதி சனிக்கிழமையன்றும் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும். தனியார் நிறுவனங்களே தாமாக முன்வந்து இதில் ஏதாவது மாற்றங்கள் செய்தாலே ஒழிய தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பில்லை.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.