.

Pages

Sunday, November 4, 2018

முத்துப்பேட்டை ஈஸ்ட் கோஸ்ட் சாலை தடுப்பு சுவரில் அரசு விரைவுப் பேருந்து மோதி விபத்து (படங்கள்)

முத்துப்பேட்டை, நவ.04
திபாவளி பண்டிகையொட்டி சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்னையிலிருந்து நேற்று சனிக்கிழமை இரவு புறப்பட்டு இராமேஸ்வரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் ஈஸ்ட் கோஸ்ட் சாலை முத்துப்பேட்டை அருகே வந்தபோது சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த பயணிகள் காயங்களின்றி தப்பினர். இச்சாலையில் நள்ளிரவில் வாகனப் போக்குவரத்து குறைவாக காணப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமடைந்த அரசுப் பேருந்தை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை 'சமூக ஆர்வலர்' சூனா இனா (சுல்தான் இப்ராஹீம்) கூறியது;
'முத்துப்பேட்டை ஈஸ்ட் கோஸ்ட் பை பாஸ் சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, இரவில் கடந்து செல்லும் வாகனங்கள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றன. இப்பகுதியில், வாகன விபத்து தடுப்பு எச்சரிக்கை அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக வாகன வேகத் தடுப்பு, சாலையின் வளைவுகளில் ஒளி எழுப்பான், எல்இடி விளக்குகள் போன்றவற்றை அமைப்பதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.