.

Pages

Thursday, November 8, 2018

துபை மருத்துவமனையில் போராடும் 'நாடு இல்லா' குழந்தையும்! பாராட்டத்தக்க இந்திய சட்டமும்!

அதிரை நியூஸ்: நவ.08
துபையில் பிறந்த ஒரு குழந்தை தான் பிறந்தது முதலே இருதய நோயினால் உயிருக்குப் போராடி வருகின்றதென்றால் இன்னொருபுறம் மருத்துவ செலவினங்களும் நாள்தோறும் கூடிக்கொண்டே வருகின்ற அதேவேளை பாஸ்போர்ட் பெற முடியாத சிக்கல் நிலவுவதால் அந்தக் குழந்தைக்கு விசாவும் அடிக்க இயலவில்லை, மருத்துவ இன்ஷூரன்ஸூம் செய்ய இயலாத சூழல் நிலவுகிறது.

50 வயது முஹமது அர்ஷத் கான் இவர் தான் அந்தக் குழந்தையின் தந்தை. இவர் 3 மாத குழந்தையாக இருக்கும் போது இவரது பெற்றோர்கள் பாகிஸ்தானிலிருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து, குடியேறிய பிரிட்டன் தேசத்தவராக அங்கீகரிக்கப்பட்டனர் (British citizen by descent). அவரது தந்தையும் பிரிட்டனின் ராயல் ஏர்போர்சில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். முஹமது அர்ஷத் கானின் மனைவி ஒரு பாகிஸ்தானிய குடிமகளாக இன்னும் தொடர்பவர். இவர்களுக்கு அமீரகத்தில் பிறந்தது தான் தற்போது மருத்துவமனையில் உள்ள குழந்தை.

முஹமது அர்ஷத் கான் துபையில் பிறந்த தனது குழந்தைக்கு பிரிட்டன் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்துள்ளார் ஆனால் பிரிட்டன் தூதரகம் 'குடியேறியதன் மூலம் பிரிட்டன் பிரஜையானவர்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடையாது' என மறுத்துவிடுகின்றது.

பிறப்பின் அடிப்படையில் பிரிட்டீஷ் பிரஜையாக உள்ளவர்களுக்கு மட்டுமே வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரிட்டன் பிரஜா உரிமை தரப்படும் அல்லது குடியேறியதன் மூலம் பிரிட்டன் பிரஜையானவரின் குழந்தைகள் பிரிட்டனுக்குள் பிறந்திருக்க வேண்டும் என சட்டத்தை காரணம் காட்டி மறுத்துவிடுகின்றது.

எனினும் முஹமது அர்ஷத் கான் பிரஜா உரிமையை பெற்றிட தொடர்ந்து போராடி வருகின்றார், தேவையான ஆவணங்களையும் சமர்ப்பித்து மறுவிண்ணப்பம் செய்துள்ளார். இந்த ஆவணங்களை பரிசீலித்து ஒரு முடிவை அறிவிக்க சுமார் 6 மாதங்கள் ஆகுமாம், அதுகூட முடிவு சாதகமாகத் தான் வரும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை, விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் ஆனால் குழந்தை கட்டாயம் பாஸ்போர்ட் பெற்றாக வேண்டிய நெருக்கடியான சூழலில் உள்ளது.

இதற்கிடையில் அர்ஷத்தின் மனைவி பாகிஸ்தானியர் என்பதால் அங்காவது பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என சென்றால் குழந்தையின் தந்தை பாகிஸ்தானியராக இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் தருவார்களாம் இல்லையெனில் குழந்தைக்கு முதலில் National Identity Card for Overseas Pakistanis (NICOP) என்கிற தேசிய அடையாள அட்டையை பெற வேண்டும், இதற்காக திருமணச் சான்று, பிறப்புச் சான்று போன்ற பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பிரிட்டன் மற்றும் பாகிஸ்தானிய சட்டங்களுடன் ஒப்பிடும் போது இந்திய சட்டங்கள் மிகவும் பாராட்டத்தக்கவையாக, எளிதானதாக அமைந்துள்ளது என்பதன் சாராம்சமே இப்பதிவு:

இந்திய சட்டப்படி வெளிநாட்டில் பிறக்கும் குழந்தையின் பெற்றோர்கள் இருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ இந்திய குடிமகனாக இருந்தால் போதுமானாது.

ஒருவேளை பெற்றோர்களில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருப்பின், வேறு எந்த நாட்டிலும் தங்கள் குழந்தைக்கு குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்பதற்கான உறுதிச்சான்றை சமர்ப்பித்தால் போதுமானாது. ஏனெனில், இந்திய சட்டப்படி இரட்டை குடியுரிமை அனுமதிக்கப்படவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.