.

Pages

Tuesday, November 13, 2018

ஷார்ஜா விமான நிலையத்தில் டிச.4ம் தேதி முதல் ஒழுங்கற்ற லக்கேஜ்களை கொண்டு செல்ல தடை!

அதிரை நியூஸ்: நவ.13
கடந்த வருடம் துபை விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டது போல் ஷார்ஜா விமான நிலையத்திலும் ஒழுங்கற்ற, மூட்டையாக கட்டப்பட்ட, குறைந்தது ஒருபுறமாவது தட்டையான அடிபாகம் இல்லாத, கயிறுகள் கொண்டு வரிந்து கட்டப்பட்ட, அனுமதிக்கப்பட்ட அளவைவிட பெரிய லக்கேஜூகள் கொண்டு செல்ல எதிர்வரும் 2018 டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தடை செய்யப்படுகின்றது. அதேபோல் ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக் கட்டப்பட்ட இரட்டை லக்கேஜூகள், நீண்ட கைப்பிடி பட்டைகளை கொண்ட பைகள் (Handbag with long straps) ஆகியவையும் தடை செய்யப்படுகின்றது.

90 செ.மீ நீளம், 75 செ.மீ உயரம் மற்றும் 60 செ.மீ அகலத்திற்கு மேற்பட்ட லக்கேஜூகளை ஒவர் சைஸ் லக்கேஜூகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களில் மட்டுமே தர வேண்டும் மேலும் ஒழுங்கற்ற லக்கேஜூகளை பிரித்து மீண்டும் ரீ-பேக்கிங் செய்வதற்கு ஷார்ஜா விமான நிலையத்தில் செயல்படும் HALA Services என்ற நிறுவனத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு ரீ-பேக்கிங் செய்ய லக்கேஜ் ஒவ்வொன்றிற்கும் 20 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும். இங்கு ரீ-பேக்கிங் செய்வதற்கான அட்டை பெட்டிகளும் விற்பனைக்கு உண்டு.

பொதுவாக எளிதாக செக் இன் செய்து கொள்வதற்கான டிப்ஸூகள்:
1. உங்களுடைய சுய தேவைகளுக்கான அனுமதிக்கப்பட்ட முக்கிய பொருட்களை கேபின் பேக்கேஜிற்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

2. பாஸ்போர்ட் போன்ற முக்கிய பயண ஆவணங்களை எப்போதும் உங்களுடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

3. லேப்டாப், டேப்லட் போன்ற சாதனங்களை தனியாக வைத்திருங்கள். இவை விமான நிலையங்களில் தனியாகவே ஸ்கேன் செய்யப்படும்.

4. உங்களுடைய பேக்கேஜ்களில் உள்ள பழைய விமானப் பயணங்களின் போது ஒட்டப்பட்ட டேக் ஸ்டிக்கர்களை (Old Tags) அப்புறப்படுத்திவிடுங்கள், இவை உங்களுடைய லக்கேஜ்கள் தவறிப்போக வழிவகுத்துவிடும்.

5. உங்களுடைய பேக்கேஜ் எப்படியிருக்கும் என்ற அடையாளத்தை நினைவில் வைத்திருப்பதுடன் பேக்கேஜ்களுக்காக தரப்படும் அடையாள அட்டைகளையும் (Luggage Identification Receipts) பத்திரமாக வைத்திருங்கள்.

6. குறைந்தது ஒரு பக்கமாவது தட்டையான அடிப்பாகம் உள்ள லக்கேஜூகளை உபயோகியுங்கள்.

7. ஒழுங்கற்ற வடிவங்களிலான சூட்கேஸ்களை உபயோகிக்க வேண்டாம்.

8. கயிறு கட்டுவதை தவிர்த்திடுங்கள் மாறாக லக்கேஜூகளின் பாதுகாப்பிற்காக டேப் (Tape) கொண்டு ஒட்டிக் கொள்வதில் தவறில்லை.

9. நீங்கள் பயணம் செய்யும் விமான நிறுவனம் அனுமதித்த அளவிற்கு மேல் கூடுதல் லக்கேஜூகள் கொண்டு வருவதை தவிர்த்தல் நலம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.