அதிரை நியூஸ்: நவ.11
Which? Travel magazine என்கிற பிரிட்டன் பத்திரிக்கை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு உலகின் பாதுகாப்பான முதல் 20 நாடுகள் மற்றும் கிரிமினல் குற்றங்கள் அதிகரிப்பால் பாதுகாப்பற்ற நாடுகள் என வகைப்படுத்தி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு சுற்றுலா முக்கியத்துவம் வாயந்த நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், யு.எஸ், தாய்லாந்து போன்றவற்றை பின்னுக்குத்தள்ளி பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 2 ஆம் இடம் பெற்றுள்ளது அமீரகம், முதலிடத்தில் ஐஸ்லாந்து நாடு தேர்வாகியுள்ளது.
இந்த ஆய்வுப்பட்டியலை 20 முக்கிய நாடுகள் குறித்து உலகப் பொருளாதார நிதியத்தின் குற்ற விகிதங்கள் குறித்த அறிக்கை, இயற்கை பேரழிவுகள் போன்ற பாரிய இடர்பாடுகள் நிகழ வாய்ப்புள்ள நாடுகள் பற்றிய அறிக்கை, தேசிய சுகாதார சேவைகள் மற்றும் சுகாதார சிகிச்சை சிக்கல்களை பற்றிய இணையதள குறிப்புகளின் அடிப்படையிலான அறிக்கை, பயங்கரவாத ஆபத்துக்களை அளவீடு செய்யும் மேல்நாடுகள் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூருக்கு அடுத்து ஸ்பெயினும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா, துருக்கி, தாய்லாந்து, இந்தியா மற்றும் மெக்ஸிகோ ஆகியவை கிரிமினல் குற்றங்கள் அதிகரிப்பால் பாதுகாப்பற்ற நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் சுகாதார இடர்களிலும் மிகவும் குறைந்த அச்சுறுத்தலைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் உலகிலேயே 3 வது இடத்திற்கு அமீரகம் தேர்வு பெற்றுள்ளது. இதற்கடுத்த நிலைகளில் ஜப்பானும், யு.எஸ் ஆகியவை இடம்பிடித்துள்ளதுடன் தேசிய சுகாதார சேவையகமும் அமீரகம் உள்ளிட்ட மேற்காணும் நாடுகளுக்கு பயணம் செல்ல தடுப்பூசி எதையும் பரிந்துரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகிலேயே இயற்கை பேரழிவுகளுக்கான வாய்ப்பு குறைவான நாடுகளின் பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளது. முதலிரு இடங்களில் பார்படஸ் (வெஸ்ட் இன்டீஸ்) மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை உள்ளன. அதேவேளை ஜப்பான் இயற்கை பேரழிவுகளுக்கு வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் 13.47 சதவிகிதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.
AE's rankings
> #2-Risk of violent crime (from better to worse)
>#3-Risk of natural disaster (from less likely to more likely)
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.