.

Pages

Sunday, November 11, 2018

அகில இந்திய கால்பந்து போட்டியில் விளையாடும் அதிரை வீரருக்கு முஸ்லீம் லீக் பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.11
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்தவர் அப்துல் சுக்கூர். இவரது மகன் ஏ.எஸ் முகமது ஆத்திப் (13). காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவன். இவர், அகில இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (SGFI) சார்பில், தமிழக கால்பந்து அணியில் பங்கேற்கும் 14-வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான தேர்வில் வென்று, எதிர்வரும் நவ.26 ந் தேதி அசாமில் நடைபெறும் அகில இந்திய கால்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட உள்ளார்.

இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில், மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், சாதனை வீரர் ஏ.எஸ் முகமது ஆத்திப்பை இன்று ஞாயிற்றுக்கிழமை சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கினார். மேலும், பிறந்த ஊருக்கும், பெற்றோருக்கும், கல்வி பயலும் பள்ளிக்கூடத்திற்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்து தந்திருக்கும் வீரர் ஏ.எஸ் முகமது ஆத்திப்பை பாராட்டி தொடர் சாதனை படைக்க வாழ்த்து தெரிவித்தார்.

அருகில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், பொருளாளர் ஏ.சேக் அப்துல்லா, துணைச் செயலாளர் அபுபக்கர், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.