.

Pages

Tuesday, November 13, 2018

எதிஹாத் ஏர்வேஸ் 15 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்!

அதிரை நியூஸ்: நவ.13
எதிஹாத் ஏர்வேஸ் துவங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம்

அபுதாபி எமிரேட்டுக்குச் சொந்தமான எதிஹாத் ஏர்வேஸ் (Etihad Airways) நிறுவனம் தனது முதலாவது பயணிகள் சேவை துவக்கி 15 ஆண்டுகள் பூர்த்தியானதை தொடர்ந்து சுமார் 400 எதிஹாத் ஏர்வேஸ் நிறுவனத்தின் எஞ்சினியரிங் மற்றும் டெக்னிக்கல் பிரிவு ஊழியர்கள் ஒன்றிணைந்து 15 என்ற எண்ணை அடையாளமிட்டு குறிக்கும் விதமாக அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் ஏர்பஸ் A380s என்ற விமானத்தின் முன் குழுமி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

எதிஹாத் ஏர்வேஸ் நிறுவனம் தனது முதலாவது ஒற்றை எஞ்சினுடன் கூடிய ஏர்பஸ் A330-200 என்ற விமானத்தை 2003 நவம்பர் 5 ஆம் நாள் அல் அய்ன் நகருக்கு துவக்க சேவையின் அடையாளமாக இயக்கியது.

பின்பு தனது முதலாவது பயணிகள் விமானச் சேவையை 2003 நவம்பர் 12 ஆம் நாள் அபுதாபியிலிருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு இயக்கியது.

எதிஹாத் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதலாவது விமானச் சேவை துவங்கியதை நினைவுகூறும் வகையில் பெய்ரூட் சென்ற EY 535 என்ற விமானத்தில் பறந்த அனைவருக்கும் பல்வேறு சிறப்பு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. விமான புறப்பாடு பகுதியில் நேற்று (நவ.12) பிரம்மாண்ட கேக் ஒன்றும் வெட்டப்பட்டது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.