தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி 21 வார்டுகளை உள்ளடக்கியது. 12.80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இப்பகுதியில், தற்போது சுமார் 70 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா, அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ரூ.23.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாதாள சாக்கடை திட்டத்தை அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இத்திட்டத்தை செயல்படுத்தக்கோரி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் தலைமையில் அக்கட்சியினர், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை அவரது அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப், பொருளாளர் ஏ.சேக் அப்துல்லா, துணைச் செயலாளர் அபுபக்கர், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது, உறுப்பினர் சாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட சி.வி சேகர் எம்.எல்.ஏ உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தாரம்.
கொடுக்கவேண்டிய இடத்தில் மனுவை கொடுத்து காயை நகர்தும் முஸ்லிம்லீக் செயலுக்கு பாராடுக்கல்
ReplyDelete