அதிரை நியூஸ்: நவ.05
துபை நயிஃப் (Naif) ஏரியாவிலுள்ள ஒரு நகைக்கடையிலிருந்து வைரம் வாங்குவது போல் நடித்து 3.27 காரட் மதிப்புள்ள வைரம் ஒன்றை சாமர்த்தியமாக சட்டை ஜாக்கெட்டுக்குள் மறைத்து திருடினர், இதன் விலை 3 லட்சம் திர்ஹமாகும். (இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 59.6 லட்சம்) இந்த திருட்டு நடந்த 3 மணிநேரத்திற்குப் பின்பே நகைக்கடைக்காரர்கள் வைரம் திருடு போயிருப்பதை கண்டுபிடித்து துபை போலீஸாருக்கு தெரிவித்தனர்.
போலீஸார் சீன ஜோடி ஒன்று திருடியிருப்பதை சிசிடிவி காட்சிகள் வழியாக உறுதி செய்து கொண்டதுடன் அவர்களைப் பற்றிய விபரங்களையும் சேகரித்தனர். வைரம் திருடிய சீன ஜோடி அதேநாளிலேயே இந்தியா வழியாக சீனா செல்வதற்காக பறந்து மும்பை விமான நிலையம் வந்திருந்தனர்.
துபை போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று இந்திய அதிகாரிகள் மும்பை விமான நிலையத்தின் டிரான்ஸிட் பகுதியில் சீனா செல்லும் விமானத்திற்காக காத்திருந்த சீன ஜோடியை கைது செய்து துபை புறப்பட்ட முதல் விமானத்திலேயே திருப்பி அனுப்பி வைத்தனர். வைரத்தை விழுங்கியிருந்த சீனப்பெண்ணிற்கு துபையில் மருந்து செலுத்தப்பட்டு வெற்றிகரமாக மீட்கப்பட்டது. இவை அனைத்தும் 20 மணிநேரத்திலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.