.

Pages

Monday, November 12, 2018

எதிர்வரும் ஹஜ் சீசன் முதல் யாத்ரீகர் குழுவினரை ஒருங்கிணைக்கும் ஆன்லைன் திட்டம் அறிமுகம்!

அதிரை நியூஸ்: நவ.12
எதிர்வரும் ஹஜ் சீசன் முதல் யாத்ரீகர் குழுவினரை ஒருங்கிணைக்கும் ஆன்லைன் திட்டம் அறிமுகம்.

ஹஜ் யாத்ரீகர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து பன்மொழி மற்றும் பல கலாச்சாரங்களுடைய மக்கள் புனித ஹஜ்ஜிற்காக வருகை தருகின்றனர். இவர்களை 2 கட்டங்களாக எலக்ட்ரானிக் பிளாட்பார்ம் எனும் ஆன்லைன் முறையில் ஒருங்கிணைக்கப்படுவர் என ஹஜ் ஏற்பாடுகள் தொடர்புடைய பல்வேறு அமைச்சக அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினருக்கான பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஹஜ் பிரயாணிகளின் வருகை மற்றும் புறப்பாடு, புனித நகரங்களுக்கிடையே பயணம் செய்தல் போன்றவை ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்படும், இரண்டாம் கட்டமாக புனித மக்காவிலுள்ள புனிதத் தலங்களான மினா, முஜ்தலிபா, அரபாத் மற்றும் புனித கஃபத்துல்லா ஆகியவற்றிற்கிடையே பயணங்கள் மேற்கொள்ளும் போதும் அவர்கள் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்படும் என ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆன்லைன் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் பலனாக யாத்ரீகர்கள் அமைதியாகவும், எளிதாகவும், வசதியாகவும் ஒன்றிணைந்து தங்களுடைய மார்க்க அனுஷ்டானங்களை மேற்கொள்ள இயலும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.