தஞ்சாவூர், ஜூலை 11
மழை பெய்யாத நிலையில், காவிரி நீர் வரத்தும் இல்லாததால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள ஜல் சக்தி அபியான் திட்டத்தில் தேசிய அளவில் 254 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 24 மாவட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டமும் ஒன்று.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் இத்திட்டத்தின்கீழ், நிலத்தடி நீர்மட்டம் குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் அம்மாபேட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூர், திருவோணம் ஆகிய 10 வட்டாரங்களில் நிலத்தடி நீர் 100 சதவீதத்துக்கும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், நீர்மட்டம் ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதேபோல, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வட்டாரங்களில் 70 - 90 சதவீதம் நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த இரு வட்டாரங்களையும் அரை நெருக்கடி பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மதுக்கூர், பூதலூர் வட்டாரங்களில் மட்டுமே நிலத்தடி நீர் பாதுகாப்பான நிலையில் உள்ளது. இந்த இரு வட்டாரங்களிலும் 70 சதவீதம் நிலத்தடி நீர் உள்ளது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோடை பருவத்திலும், குறுவை பட்டத்திலும் நிலத்தடி நீரைக் கொண்டு பரந்த அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. காவிரி நீர் கிடைக்காத நிலையில், நிகழாண்டு ஜனவரி மாதத்திலிருந்து மழைப் பொழிவும் இல்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.
திருவையாறு வட்டாரத்தில் 60 - 70 அடி ஆழத்தில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் இப்போது 120 முதல் 150 அடி வரை ஆழத்துக்குச் சென்றுவிட்டது. இதேபோல, ஒரத்தநாடு வட்டாரத்தில் 130 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் இப்போது, 200 அடிக்கும் கீழே இறங்கிவிட்டது. திருவோணம் வட்டாரத்தில் ஏறத்தாழ 100 அடியிலிருந்து 200 அடிக்கும், பேராவூரணி வட்டாரத்தில் 130 அடியிலிருந்து 200 அடிக்கும் ஆழத்துக்குப் போய்விட்டது. சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 400 - 500 அடி ஆழத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மோட்டார் பம்ப்செட்களில் தண்ணீர் வரத்து வேகமும் குறைந்துவிட்டது. இதனால், விவசாயிகள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஆழ்குழாயில் மேலும் குழாய்களை இறக்கி வருகின்றனர்.
திருவையாறு வட்டாரத்தில் சில இடங்களில் நிலத்தடி நீர் ஆழத்துக்குச் செல்ல, செல்ல உவர் நீராக மாறிக் கொண்டிருக்கிறது. இப்போது, நிலத்தடி நீரில் 5 முதல் 10 சதவீதம் உவர்ப்புத்தன்மையுடன் இருக்கிறது என விவசாயிகள் கூறுகின்றனர். இந்த நிலைமை தொடர்ந்தால், நிலத்தடி நீர் முழுவதும் உவர் நீராக மாறிவிடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இதை வயல்களில் பாய்ச்சினால், பயிர்கள் கருகிவிடும். கடந்த ஆண்டு நிலத்தடி நீர் ஆழத்துக்குச் சென்றபோது உப்பாக மாறி பயிர்கள் கருகின என்றனர் விவசாயிகள்.
டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக கோடை காலம் வரை நிலத்தடி நீர்மட்டம் கைக்கொடுக்கும். அதன் பிறகு தென் மேற்குப் பருவமழை பெய்யும்போது நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு வாய்ப்பாக இருக்கும். நிகழாண்டு 7 மாதங்களாக மழை பெய்யாததால் நிலத்தடி நீர் குறைந்துவருகிறது. இந்த நிலைமை ஆகஸ்ட் மாதத்திலும் நீடித்தால், குறுவை சாகுபடியில் பூக்கும் தருணத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுக்க கூடும் என்ற அச்சம் விவசாயிகளிடம் மேலோங்கியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.