.

Pages

Monday, July 22, 2019

காமன்வெல்த் பளு துக்கும் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு!

தஞ்சாவூர் மாவட்டம், காமன்வெல்த் பளு தூக்கும் பேர்டடியில் தங்கம் பதக்கம் வென்ற காவல் உதவி ஆய்வாளர் செல்வி.பி.அனுராதா அவர்களை காவல் துறை மத்திய மண்டல தலைவர் வரதராஜு  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (22.07.2019) பாராட்டி கௌரவித்தனர்.

ஆஸ்திரேலியா நாட்டின் ஜமாயோ தீவில் நடைபெற்ற 2019 காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ உடல் எடை பிரிவில் இந்திய நாட்டின் சார்பில் பங்கு பெற்று தங்க பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் செல்வி.பி.அனுராதா அவர்களுக்கு தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மாஹலில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவிற்கு மத்திய மண்டல காவல் துறை தலைவர் வரதராஜு தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை மற்றும் தஞ்சாவூர் சரக காவல் துறை துணை தலைவர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் வரவேற்புரையாற்றினார். காமன் வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவல் உதவி ஆய்வாளர் செல்வி.பி.அனுராதா அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நினைவு பரிசு மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவித்தார்.

காவல் துறையின் சார்பில் ரூ.1,00,000த்திற்கான காசோலை மற்றும் கேடயத்தினை மத்திய மண்டல காவல் துறை தலைவர் வரதராஜு வழங்கி கௌரவித்தார். தஞ்சாவூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.