.

Pages

Monday, July 8, 2019

ஏர் இந்தியா விமான 2 வழித்தடங்களில் புனித ஜம் ஜம் நீர் கொண்டு வர தடை! யாத்ரீகர்கள் கொதிப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 08
புனித ஹஜ் சீசன் துவங்கியதை அடுத்து ஜெத்தா - கொச்சி (AI 964), ஜெத்தா - ஹைதராபாத் / மும்பை (AI 966) ஆகிய வான் தடங்களில் இயக்கப்பட்டு வந்த விமானங்கள் ஹஜ் விமான பயணிகளுக்காக மாற்றப்பட்டு இத்தடங்களில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுவதால் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை இவ்விரு விமான தடங்களில் மட்டும் புனித ஜம் ஜம் நீரை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தடை உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஜூலை 4 தேதிய சுற்றறிக்கை தெரிவிக்கின்றது.

ஏர் இந்தியாவின் அறிவிப்பில் ஆளும் மத்திய பீஜேபி அரசின் உள்நோக்கம் கொண்ட சதி இருக்கலாம் என உம்ரா சென்றுள்ள யாத்ரீகர்கள் சந்தேகப்படுவதுடன் 5 லிட்டர் ஜம் ஜம் கேனை வைக்க எவ்வளவு இடம் தேவைப்படும் என கேள்வியெழுப்பி தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

மேற்காணும் 2 வான் தடத்தில் இயக்கப்படும் விமானங்களில் உம்ரா பயணிகள் மட்டும் பயணிப்பதில்லை மாறாக சாதாரண பயணிகளும் கலந்தே வருகின்றனர் எனும் போது எத்தனை ஜம் ஜம் தண்ணீர் கேன்களை கொண்டு வருவார்கள்? என்றும் யோசிக்க வேண்டும்.

அதேவேளை புனித ஹஜ்ஜிற்காக இயக்கப்படும் சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் சவுதியிலிருந்து பிற வான் தடங்களுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு இத்தடை பொருந்தாது.

மக்காவில் செயல்படும் "நேஷனல் வாட்டர் கம்பெனி" (NWC) எனப்படும் புனித ஜம் ஜம்  கிணற்று நீரை கையாளும் நிறுவனம் தற்போது 10 லிட்டர்களுக்கு பதிலாக 5 லிட்டர் கேன்களை மட்டுமே வழங்கி வருகின்றது.  ஹஜ் உம்ரா செய்யும் முஸ்லீம்கள் தாங்களும் அருந்தி தாயகத்தில் உள்ள உறவுகளுக்கும் வழங்க இப்புனித நீரை கொண்டு வருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.